கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
Tamil Nadu: I-T Department is conducting searches at PSK Engineering Construction & Co., a Namakkal based construction firm. Search has been commenced after preliminary inquiries based on the information received about unaccounted cash in possession of the firm.
— ANI (@ANI) April 12, 2019
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது சென்னை, நெல்லை மற்றும் நாமக்கல் உள்டபட 18 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.