IIT Madras வளாகத்தில் lockdown: 66 மாணவர்களுக்கு COVID 19 தொற்று உறுதி

ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள ஒன்பது மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகையில் இருந்து COVID-19 தொற்று பதிவாகியுள்ளதாக அறியப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2020, 10:47 AM IST
  • ஐ.ஐ.டி மெட்ராசின் 66 மாணவர்களுக்கும் 5 ஊழியர்களுக்கும் தொற்று உறுதி.
  • இதுவரை 408 மாணவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
  • தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
IIT Madras வளாகத்தில் lockdown: 66 மாணவர்களுக்கு COVID 19 தொற்று உறுதி  title=

ஐ.ஐ.டி மெட்ராசின் 66 மாணவர்களுக்கும் 5 ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகம் தற்காலிகமாக லாக்டௌனில் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை புதிதாக 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் சோதிக்குமாறு ஐஐடி-மெட்ராஸுக்கு தமிழக அரசு (Tamil Nadu Government) அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக வரும் நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஐ.ஐ.டி மெட்ராஸாசில் உள்ள அனைத்து பாடத்துறைகளையும் வசதிகளையும் உடனியாக மூடுமாறு ஞாயிற்றுக்கிழமை ஐ.ஐ.டி மெட்ராசால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டது.

"விடுதிகளில் அண்மையில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, மேலும் அறிவிப்பு வரும் வரை அனைத்து துறைகள், மையங்கள் மற்றும் நூலகத்தை உடனடியாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களும், ஊழியர்களும், பணித்திட்ட ஊழியர்களும், ஆய்வாளர்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை வீட்டிலிருந்து வேலை செய்வார்கள். ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும், ஆய்வாளர்களும், பணித்திட்ட ஊழியர்களும் தங்கள் சொந்த பாதுகாப்புக்காக, தங்கள் விடுதி அறைகளுக்குள்ளேயே இருக்குமாறும், அனைத்து நேரங்களிலும் தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, சுவை / வாசனை இழப்பு போன்ற கோவிட் அறிகுறிகளோ அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகளோ தென்பட்டால், நீங்கள் உடனடியாக ஐ.ஐ.டி மெட்ராஸ் மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும்," என்றும் சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி மெட்ராஸ் (IIT Madras) வளாகத்தில் உள்ள ஒன்பது மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகையில் இருந்து COVID-19 தொற்று பதிவாகியுள்ளதாக அறியப்படுகிறது. ஐ.ஐ.டி-மெட்ராஸ் வளாகத்தில் மொத்தம் 774 மாணவர்கள் வசித்து வருகின்றனர். இதுவரை 408 மாணவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

ALSO READ: COVID-ல் இருந்து மீண்டவர்களை மட்டும் தாக்கும் புதிய கொடிய நோய்..!

கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று எண்ணிக்கை ஒரு சமயத்தில் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தது. எனினும் கடந்த பல நாட்களாக, தொற்றின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவான குறைந்து வருகிறது.

இந்நிலையில், ஐ.ஐ.டி மெட்ராசில், வளாகத்தின் அனைத்து செயல்பாடுகளையும் மூடும் அளவிற்கு தொற்று அதிகரித்துள்ள விஷயம் அதிகாரிகளுக்கு கலக்கத்தை அளித்து வருகிறது.  

ALSO READ: ஆயுர்வேத சிகிச்சையால் 2000 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News