வாயில் சோற்றை அமுக்கி பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த கொடூரம்..!

நீலகிரி மாவட்டம் உதகையில் ரகசிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை வாயில் சோற்றை அமுக்கி கொலை செய்த கொடூரத்தாயை போலீசார் கைது செய்தனர்.   

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 25, 2022, 01:26 PM IST
  • ரகசிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தை
  • வாயில் சோற்றை அமுக்கி துடிக்க துடிக்க கொலை
  • பெற்ற குழந்தையை தாயே கொன்று போட்ட கொடூரம்
வாயில் சோற்றை அமுக்கி பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த கொடூரம்..! title=

நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான கீதா. இவரது கணவர் கார்த்திக். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் 3 வயதான மூத்த மகனுடன் கார்த்திக் கோவையிலும், 1 வயதான குழந்தை நித்தினுடன் கீதா உதகையிலும் வசித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, கடந்த மாதம் 14ம்தேதி குழந்தை நித்தின் மயங்கி விழுந்ததாக கூறி ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கீதா கொண்டு சென்றிருக்கிறார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆம், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது. குழந்தையின் இறப்பு குறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணான தகவல்களே அதில் கிடைத்தது. 

இதனால் சந்தேகமடைந்த போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதற்குள் கீதா குறித்த சில திடுக்கிடும் பின்னணிகள் வெளிவந்தன. கீதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி 3வதாக கார்த்திக்குடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. திருமண வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் வாழ்க்கையை நகர்த்தியவர் கார்த்திக்கை விட்டு பிரிந்ததும் 4வதாக ஒருவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் குழந்தை நித்தினை சரியாக கவனிக்காமல் இருந்திருக்கிறார். இப்படியாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல்கள் எல்லாம் கீதா மீதான சந்தேகத்தை இன்னும் ஆழப்படுத்தியது. அதற்குள் உயிரிழந்த குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவு வெளிவந்தது. அது கிட்டத்தட்ட எல்லாத்தையும் உறுதிப்படுத்தியது.

மேலும் படிக்க | பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு நின்றுவிடக் கூடாது: இயக்குநர் வசந்தபாலன்

ஆம், கொலை... மூச்சு முட்டச் சோற்றை வாயில் அடைத்து துடிக்கத் துடிக்க குழந்தையை கொன்றிருக்கிறார், கீதா. உடனே கீதாவை கைது செய்த போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொள்ள மேலும் குலைநடுங்க வைக்கும் தகவல்கள் வெளிவந்தன. கார்த்திக்கைப் பிரிந்த கீதாவிற்கு பல ஆண் நண்பர்களுடம் பழக்க ஏற்பட்டிருக்கிறது. அடிக்கடி வெளியூருக்குச் சென்று அவர்களுடன் ஊர் சுற்றி வந்திருக்கிறார். இதனால் குழந்தை நித்தினை சரிவரப் பார்த்துக்கொள்ள முடியாமல் போயிருக்கிறார். ஒரு கட்டத்தில் இடையூறாக இருந்த நித்தினை பெற்ற பிள்ளை என்றும் பாராமல் கொலை செய்ய துணிந்தார். குழந்தை நித்தினை மதுகுடிக்க வைத்து சோற்றை வாயில் வைத்து அடைத்து துடிக்க துடிக்க  கொலை செய்திருக்கிறார். இதனையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் கீதாவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க | ஜாதகத்தை நம்பி 4 மாத குழந்தையைக் கொலை செய்த தாய்! பழனி அருகே கொடூரம்...

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News