புரெவி புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 2, 2020, 10:38 AM IST
புரெவி புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம் title=

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..!

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் (Burevi Cyclone) பாம்பனுக்கு 530  கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) கணித்துள்ளது. மேலும், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது.. இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி புரெவி புயல் பாம்பனுக்கு தென்கிழக்கே 530 Km தொலைவிலும், கன்னியாகுமரிக்கு (Kanyakumari) கிழக்கே 700 Km தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இப்புயல் 6 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவில் இலங்கையின் (Sri Lanka) திரிகோணமலை அருகே கரையைக் கடக்கிறது.

ALSO READ | புயலாக வலுப்பெறும் 'புரெவி'... தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

இதனால், இலங்கையின் கிழக்குப் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துவருகிறது. மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. திரிகோணமலை அருகே கரையைக் கடந்த பின் புரெவி புயல் அதே வேகத்துடன் மேற்கே நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை அடைகிறது.

தொடர்ந்து நாளை மறுநாள் (டிசம்பர்-4) அதிகாலை குமரி - பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புரெவி புயல் கரையைக் கடக்கும். மணிக்கு 12 Km வேகத்தில் நகர்ந்து வரும் புயல் பாம்பன் - குமரி இடையே கரையைக் கடக்கும்போது மணிக்கு 95 Km வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்" என குறிப்பிட்டுள்ளனர். மேலும், தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2,3 தேதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ALSO READ | தமிழகத்தை நோக்கி நகரும் மற்றொரு புயல்... டிச.,2 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை!!

அதேபோல் தெற்கு கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் வரும் டிசம்பர் 3-லில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் 4 ஆம் தேதி வரையிலுமே மழை வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக ராமேசுவரத்தில் பாம்பன் துறைமுகத்தில் 7 ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News