தமிழகத்தில் இன்று ஒரு நாளில், மட்டும் 527 கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 3,550-ஆக அதிகரித்துள்ளது. மற்றும் கொரோனாவுக்கு இன்று இறப்பு பதிவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்., தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 377 ஆண்கள், 150 பெண்கள் அடங்குவம். இதன் காரணமாக தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,550-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 30 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆக., மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,409-ஆக உயர்ந்துள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,107 பேர் சிகிச்சையில் உள்ளனர்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றும் தமிழகத்தில் தற்போது 36 அரசு ஆய்வகங்கள் மற்றும் 14 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 50 ஆய்வகங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது எனவும், இன்று மட்டும் 12,863 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்புகளில் பெருபாலான வழக்குகள் சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில்., இதுவரை 153489 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என 3550 மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளது. 2392 ஆண்கள், 1157 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை இந்த பட்டியலில் அடங்குவர்.