சொத்து வரியை மாற்றியமைத்து அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் சொத்துவரி 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது!!

Last Updated : Jul 23, 2018, 02:05 PM IST
சொத்து வரியை மாற்றியமைத்து அரசாணை வெளியீடு!  title=

தமிழகத்தில் சொத்துவரி 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது!!

தமிழகத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டில் இருந்து சொத்து வரி உயர்த்தப்படாமல் உள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பை சந்தித்து வந்தது. இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சொத்து வரியை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், தற்போது வசூலிக்கப்படும் சொத்து வரியில், பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமல் சொத்து வரி வசூலிக்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, தமிழக அரசு சார்பாக புதிய சொத்து வரி தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மூன்று விதமாக பிரித்து இந்த சொத்து வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி குடியிருப்பு பகுதி, வாடகை குடியிருப்பு பகுதி மற்றும் குடியிருப்பு இல்லாத பகுதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதமும் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு ஆறு மாதங்களுக்கான சொத்து வரியிலேயே இந்த புதிய சொத்து வரி முறை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

 

Trending News