காவல் நிலையத்தையே காவல் காத்த ஆடுகள் -சுவாரசியம்

Crime News in Namakkal: ஆடு திருட்டு வழக்கில் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2022, 06:52 PM IST
  • ஆடுகளை திருடியதாக மாணவர்கள் கைது.
  • நாமக்கல்லில் வினோத சம்பவம்.
  • பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகளின் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை.
காவல் நிலையத்தையே காவல் காத்த ஆடுகள் -சுவாரசியம் title=

நாமக்கல்: ஆடுகளை திருடியதாக வாள் சண்டை போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற கல்லூரி மாணவர் மற்றும் 11-ம்‌ வகுப்பு‌  மாணவரும் கைது, தலைமறைவான 2 பேரை நாமக்கல் போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல்லில் கடந்த 28-ம் தேதி போலீசார் சேந்தமங்கலம் சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது  இருச்சக்கர வாகனத்தில் இரண்டு ஆடுகளுடன் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவர்களை நாமக்கல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரும் நாமக்கல் அடுத்துள்ள துத்திக்குளம் பகுதியில் ஆடுகளை எடுத்து வந்ததும் அவர்களிடம் அவரது நண்பர்கள் இருவர் ஆடுகளை திருடி கொடுத்து நாமக்கல் வரை எடுத்து செல்லுமாறும் கூறியது தெரியவந்தது.

மேலும் இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கல்லூரி மாணவரின் நண்பர்களான இருவர் வாகன சோதனையில் காவல்துறையினரை கண்டதும் தப்பியோடியதும் தெரியவந்தது.

மேலும் படிக்க: வடிவேல் காமெடி பாணியில் ‘எங்கள் ஊரின் பெயரைக் காணோம்’ என்று கிராம மக்கள் போராட்டம்

அதன்பின், நாமக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் வேலன்,  மற்றொருவன் பள்ளி மாணவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். 

அப்போது நீதிபதி பள்ளி சிறுவனை மட்டும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார். கல்லூரி மாணவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதில் கல்லூரி மாணவன் அரவிந்த் வேலன், மாநில அளவிலான வாள் சண்டை போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் சுவாரசியம் என்னவென்றால் பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகளின் உரிமையாளர் யார் என்பது தெரியாததால், இரண்டு நாட்களாக நாமக்கல் காவல் நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டதோடு, அதற்கு மூன்று நேர உபசரிப்பு போலீசாரால் நடத்தப்பட்டது. இருப்பினும் தற்போது அவற்றை தொடர்ந்து பராமரிக்க முடியாததால் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பராமரிப்பிற்காக விடப்பட்டுள்ளது.

நாமக்கல் நகர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டோரை பிடிக்காத போலீசார் ஆடு திருடியவர்களை மட்டும் பிடிக்கவா போகிறார்கள் என்கின்றனர் நாமக்கல் நகர வாசி மக்கள்.

மேலும் படிக்க: நாம ஜெயிச்சுட்டோம் மாறா...விமானத்தில் பறந்த வசதியற்ற மாணவிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News