தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்வது சரியல்ல: ஜெயக்குமார்

நவம்பர் வரை குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jun 19, 2019, 01:27 PM IST
தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்வது சரியல்ல: ஜெயக்குமார் title=

நவம்பர் வரை குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. நிலைமை இப்படியிருக்க பெரும்பாலான IT நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறுகையில்; இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுவது பெருமைக்குரியது. தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்க முடியாதது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஆலோசிக்கப்பட வேண்டிய ஒன்று . தமிழகத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

நீர் மேலாண்மை என்பது ஒரு முக்கியமான பொருள். நாங்கள் என்ன செய்ய முடியுமோ அதை நாங்கள் அதிகபட்சமாகச் செய்கிறோம். குறைவான மழைக்குப் பிறகும், நாங்கள் தண்ணீரை வழங்க கடுமையாக முயற்சி செய்கிறோம். நகரத்தில் 400 விநியோகிக்கும் தண்ணீர் தொட்டிகள். இந்த நேரத்தில், குடிநீர் பிரச்சனையை வைத்து அரசியல் செய்வது சரியல்ல என்றார்.

மீன்பிடி தடைக்காலத்தை வேறு மாதங்களுக்கு மாற்ற வேண்டும் என மீனவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும். மீன்பிடி தடைக்காலத்தை மாற்றுவது குறித்து அனைத்து கடலோர மாநிலங்களுடன் விவாதிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். 

 

Trending News