தாய் கழகத்தில் இணைகிறது MGR அம்மா தீபா பேரவை!

MGR அம்மா தீபா பேரவை இனி தாய் கழகமான அதிமுக-வுடன் இணைந்து செயல்படும் என பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 19, 2019, 05:19 PM IST
தாய் கழகத்தில் இணைகிறது MGR அம்மா தீபா பேரவை! title=

MGR அம்மா தீபா பேரவை இனி தாய் கழகமான அதிமுக-வுடன் இணைந்து செயல்படும் என பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக-வில் இருந்து விலகி MGR அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை அவரது அண்ணன் மகள் தீபா தொடங்கினார்.

தீபாவின் அமைப்புக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகுவதாக தீபா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார். நெட்டீசன்கள் விமர்சனத்திற்கு பின்னர் இந்த பதிவு நீக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தீபா பேரவையில் இருந்த தலைமை நிலைய நிர்வாகிகள் அதிமுகவுக்கு திரும்பியுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்த தீபா பேரவையின் தலைமை நிலைய செயலாளர் தொண்டன் சுப்ரமணி தெரிவிக்கையில்., “எங்கள் பொது செயலாளர் தீபாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இங்கு வரவில்லை

அதிமுகவில் இணைய விரும்பி கடிதம் வழங்கி உள்ளோம். தலைமைக் கழகம் எங்களை என்று அழைக்கிறதோ அன்று நாங்கள் அனைவரும் எந்த நிபந்தனையின்றி இணைய உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தீபா அவர்கள் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என கூறியிருந்தார் அதனடிப்படையில் இன்று இந்த கடித்தை அளித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, MGR அம்மா பேரவை இனி தாய்கழகமான அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என்று தீபா அறிவித்தார்.

உடல்நலக்குறைவால் தொடர்ந்து அரசியலில் ஈடுபட முடியவில்லை என்றும், தனக்குப் பின்னர் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற அதிமுகவுடன் இணைவதாக தீபா தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக-வில் பதவி, பொறுப்புகளை எதிர்பார்க்கவில்லை; போயஸ் கார்டன் இல்லத்தை மீட்பதில் சட்டப்பூர்வமான பணிகள் தொடரும் என்றும் தீபா குறிப்பிட்டுள்ளார்.

Trending News