ரஜினி-கமல் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!!

Last Updated : Jan 14, 2017, 11:54 AM IST
ரஜினி-கமல் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தனது ஆதரவை தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.

தமிழ் வார இதழ் ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாடலாசியர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது விழாவில் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‛நம் கலாசாரம் காப்பாது நம் கடமை' என்றார். 

பிறகு வைரமுத்து கூறியதாவது: 'யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டைப் பற்றி கருத்து கூறிவிடலாம், ஆனால் 'முரட்டுக்காளை' அதைப் பற்றி கருத்து கூறியதுதான் சிறப்பு' என நெகிழ்ந்தார்.

மேலும் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:  'மக்களுக்காகத்தான் சட்டம். மக்களுக்காக ஒரு சட்டம் திருத்தப்பட வேண்டும்' என்றார்.

More Stories

Trending News