பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 64.தமிழகத்தின் முக்கியமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர் ஞாநி சங்கரன்.
செங்கல்பட்டில் பிறந்த அவர், எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் என்று பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவர், சமகால அரசியல் குறித்த விமர்சனங்களையும், கருத்துகளையும் ஊடகங்களில் வெளிப்படுத்திவந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைபாடு காரணமாக அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பல பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலியை செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த், ஞாநி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், “ எழுத்தாளர் ஞாநியின் மறைவு வருத்தம் அளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஞாநி எனது நண்பர், நான் அவரது ரசிகன், தனக்கு சரியென தோன்றுவதை பயமின்றி பேசவும் எழுதவும் கூடியவர்” என்றார்.
அவரது உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக கே.கே.நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
முகவரி:-
எண் 39,
(பத்மசேஷாத்ரி பள்ளி அருகில்) அழகிரிசாமி சாலை,
கே.கே.நகர்,
சென்னை- 78.