மனிதன் உண்ணக்கூடிய உணவுகளில் பலவகை உணவுகள் மனித உடலுக்கு உகந்ததாகவும், அதுவே எதிரியாகவும் உள்ளது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று இருந்தாலும் உணவு என்பது மனிதனின் தவிர்க்க முடியாத இன்றியமையாத பொருளாகும்.
மனித உயிர் கொல்லியாக திகழ்ந்த கொரானாவின் தாக்கத்தால் மக்கள் உணவுகளை தேடித் தேடி அதை தரம் பார்த்து பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனால் தற்போது கடந்த கால இயற்கையான உணவுகளுக்கு மாற வேண்டிய நிலையில் மக்கள் தள்ளப்பட்டனர்.
இதனால் பழங்கால தானியங்களுக்கு புது மவுசு கூடியுள்ளது. கிராமப்பகுதிகளில் அதிகளவில் வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் கால்நடைகளில் கோழியும் ஒன்று. இந்தக் கோழிகள் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் வளர்க்கப்பட்டு வந்தன. நாளடைவில் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை வணிக நோக்கோடு நடக்கிறது.
நாட்டுக்கோழியின் முதல்தரமான கடக்நாத் என்ற கருங்கோழி மனிதனின் மிகச் சிறந்த உணவாகும். பார்ப்பதற்கு கருப்பாக பயமுறுத்தும் வகையில் உள்ள இந்த கோழி மற்ற கோழிகளைப் போல் அல்லாமல் இதனுடைய இறைச்சியும் கருப்பாகத்தான் இருக்கும். முற்றிலும் மருத்துவ குணம் கொண்ட இந்த கோழி ஆண்மை விருத்திக்கும் உகந்ததாகவே சொல்லப்படுகிறது. இதனால் இந்த கோழி ஒரு சில இடங்கள் மட்டுமே வளர்க்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.
மேலும் படிக்க | கள்ளழகர் புறப்பாட்டை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி - தமிழக அரசு ஏற்பாடு
அந்தவகையில் சேலத்தில் தற்போது கடக்நாத் கருங்கோழி விற்பனைக்கு வந்துள்ளது. சாதாரண முறையில் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்வது போன்ற கோழி போல் அல்லாமல் இதனை வகைப்படுத்தி தரம்பிரித்து எடைக்கு ஏற்றார்போல் விலையை நிர்ணயம் செய்து தனித்தனி கூண்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதுவும் இதற்கு ஒருபடி மேலே போய் தானியங்கி முறையில் கோழியை விற்பனை செய்யும் முறையில் உற்பத்தியாளர்கள் அறிமுகப் படுத்தியுள்ளனர்.
கோழிகள் அனைத்தும் தனித்தனி அறைகளில் எடைக்கு ஏற்றார்போல் அடைக்கப்பட்டு ஒவ்வொரு கோழிக்கும் க்யூ ஆர் கோடு கொடுக்கப்பட்டு அதனை ஸ்கேன் செய்த பிறகே கோழி அடைக்கப்பட்டுள்ள கதவு திறக்கப்படும் அதற்கான பணம் செலுத்தியவுடன் கோழியை பெற்றுச் செல்லும் வசதியையும் உரிமையாளர்கள் செய்துள்ளனர்.
மற்ற இடங்களில் கோழிகளை வெட்டி கரியாக கொடுக்கும் வழக்கம் இல்லாமல் அதனை முட்டைக்காகவும் அல்லது தொடர்ந்து வளர்த்துக் கொள்ளவோ அல்லது இறைச்சிக்காகவும் பயன்படுத்த கொள்ளலாம் என்பதால் உயிருடன் இது விற்பனை செய்யப்படுகிறது. முற்றிலும் தானியங்கி முறையில் விற்பனை செய்யப்படும் இந்த நிலையத்திற்கு தற்போது மவுசு கூடியுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு பின்புறம் உள்ள அப்ஸரா இறக்கத்தில் பிரத்தியேகமாக இந்த விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நிலையம் திறந்து இருக்கிறது. நிலையத்திற்கு வந்தவுடன் விருப்பப்பட்ட கோழியை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமே செலுத்தினால் கோழி அடைக்கப்பட்டுள்ள அறையில் சிறிய கதவு திறக்கப்படும். பின்னர் வாடிக்கையாளர் கோழியை பெற்று செல்லலாம்.
முற்றிலும் மருத்துவ குணம் கொண்ட இந்த கோழியை தற்போது அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர்.
இந்த கருங்கோழி இறைச்சி மிகவும் சுவையாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் குறிப்பாக ஆண்மை விருத்தியை அதிகப்படுத்தும் தன்மை உள்ளதாக கூறப்படுவதால் இதற்கு தற்போது மவுசு கூடியுள்ளது. மேலும் நகரத்தின் மையப் பகுதியிலேயே இந்த கருங்கோழி கிடைப்பதால் பொதுமக்கள் சிரமமின்றி தற்போது கருங்கோழி இறைச்சியின் சுவையை ரசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் முதன்முறையாக தானியங்கி முறையில் சேலத்தில் மக்களுக்கு புதுமையான முறையில் கருங்கோழி விற்கப்படுவது சேலம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை - காதல் விவகாரமா ?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR