களிமேடு தேர் விபத்து : அப்பர் சிலைக்கு சிறப்பு பூஜை.!

தஞ்சாவூர் மின்விபத்து ஏற்பட்ட தேரில் இருந்து மீட்கப்பட்ட அப்பர் சிலை 18 நாட்களுக்கு பிறகு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து மடத்தில் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.  

Written by - Dayana Rosilin | Last Updated : May 17, 2022, 01:06 PM IST
  • களிமேடு தேர் விபத்து
  • அப்பர் சிலைக்கு பூஜை
  • பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
களிமேடு தேர் விபத்து : அப்பர் சிலைக்கு சிறப்பு பூஜை.! title=

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் கடந்த 26ஆம் தேதி  94வது ஆண்டு அப்பர் தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது நடைபெற்ற வீதியுலாவின்போது, உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | உருவ கேலி செய்ததால் ஆத்திரம்! நண்பனை கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவன்.!

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர். அது மட்டும் இன்றி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயிரிழந்தோர் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அது மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

இந்நிலையில் விபத்து நடைபெற்று 18 நாட்கள் முடிவடைந்தவுடன் சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. முன்னதாக விபத்து ஏற்பட்டபோது தேரில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான அப்பர் சிலையும், 300 ஆண்டுகள் பழமையான ஓவியமும் மீட்கப்பட்ட நிலையில் பூஜை வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பர் சிலைக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து மடத்தில் எடுத்து வைக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் படிக்க | வெளியில் தொங்கும் மின்சாரக் கம்பிகளால் பலியாகும் மாடுகள்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News