கள்ளக்குறிச்சி விவகாரம் : ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு - 2 திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக திமுக எம்எல்ஏகள்ள உதய சூரியன், வசந்தம் கார்த்திகயேன் ஆகியோர் பேட்டியளித்துள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 22, 2024, 03:58 PM IST
  • எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தப்படுகிறது
  • அரசியல் வாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கின்றனர்
  • கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக எம்எல்ஏக்கள் இன்று விளக்கம்
கள்ளக்குறிச்சி விவகாரம் : ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு - 2 திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு  title=

சென்னை தலைமை செயலகம், சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் ஆகியோர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும், கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளுடன் தங்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக இருவர் மீதும் மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கருனாபுரத்தில் விஷச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் 30 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த மரணத்துக்கும், கள்ளச்சாராய விநியோகத்துக்கும் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளும் இதற்கு உடந்தை, மாமூல் வாங்கிக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை அவர்கள் தடுக்கவில்லை என்றும் கருனாபுரம் மக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் படிக்க | 'தவறான மருந்தை சொல்கிறார் மா.சுப்பிரமணியன்' - கொந்தளித்த இபிஎஸ்... என்ன விஷயம்?

குறிப்பாக, கள்ளச்சாராயம் விற்பனையில் திமுகவின் சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன், ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரின் பெயர்கள் பெரியளவில் அடிப்பட்டது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையிலும் கள்ளாச்சாராய வணிகர்களின் பாதுகாவலர்களாக இந்த திமுக எம்எல்ஏக்கள் இருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அன்புமணி ராமதாஸூம் இதே குற்றச்சாட்டை முன்வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இறப்புகளுக்கு பொறுபேற்க வேண்டும் என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்வைத்தார்.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விற்பனைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என திமுக எம்எல்ஏக்களான உதய சூரியன், வசந்தம் கார்த்திகேயன் விளக்கம் அளித்தனர். தங்களின் அரசியல் வாழ்க்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டுகளை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வைத்திருப்பதாகவும், தங்கள் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை அவர்கள் நிரூபிக்க வேண்டும், இல்லையென்றால் தந்தையும், மகனும் பொதுவாழ்வில் இருந்து விலகிக் கொள்ள தயாரா? என கேள்வி எழுப்பினர். மேலும், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் சென்னை தலைமை செயலகம் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டாக அறிவித்தனர்.

மேலும் படிக்க | TN Assembly 2024 : அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய்க்கு திவாலக்கியது அதிமுக - அமைச்சர் பிடிஆர் பகிரங்க குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News