மக்களவையில், கடந்த 27 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா, அரசியலமைப்பு மசோதா 2023, நாரி சக்தி வந்தன் சட்டம் அல்லது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.
கமல்ஹாசன் ட்வீட்:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “நமது குடியரசு வரலாற்றில் முக்கியமான நாள் இது. நம் நாட்டின் நாடாளுமன்ற இருக்கை புதிய வீட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நமது தேசத்தின் மிகப்பெரிய சிறுபான்மையினரான பெண்களுக்கு எதிராக நீண்ட காலமாக இழைக்கப்பட்ட அநீதியை சரிசெய்ய வழி வகுத்து கொடுத்திருக்கிறது. இதனால், மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மசோதாவை முழு மனதோடு பாராட்டுகிறேன். எந்த நாடு பாலின சமத்துவத்தை உறுதி செய்கிறதோ, அந்த நாடு செழிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
A landmark day in the history of our Republic, as the seat of our democracy moved into its new home. I’m delighted that the first Bill tabled in this new Parliament corrects a longstanding injustice perpetrated against the largest minority in our nation, the women of India. I…
— Kamal Haasan (@ikamalhaasan) September 20, 2023
ட்வீட்டில் ட்விஸ்ட் வைத்த கமல்..
மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த ட்வீட் வெளியிட்டிருந்த கமல்ஹாசன், இதில் உள்ள சில விஷயங்களை அரசியல் கட்சிகள் உற்று நோக்க வேண்டும் என்று கூறி அதில் உள்ள சில அம்சங்களை குறிப்பிட்டிருந்தார். கமல் தனது ட்வீட்டில், இந்த மசோதா அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய நடவடிக்கைக்கு பிறகுதான் நடைமுறைக்கு வருவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த மசோதாவானது மக்களவை மற்றும் மாநில சட்ட சபைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் இதனை மாநிலங்களவையிலும் நீட்டிக்கப்பட வேண்டும் எனவும் தனது ட்வீட்டில் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, இந்த மசோதா, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு பிறகுதான் நடைமுறைக்கு வருகிறது என்று சுட்டிக்காட்டிய கமல், இவை இரண்டால்தான் இதை அமல் படுத்துவதில் முன்னர் தாமதம் ஆனதாக தெரிவித்தார். இது போன்ற விஷயங்கள் இனி தடையாக இருக்க கூடாது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார். சட்டமன்ற அமைக்குகளில் பெண்களுக்கு பிரிதிநிதித்துவம் கிடைக்கும் நாளை தாம் எதிர் நோக்குவதாகவும் கமல் தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மசோதா அமலுக்கு வருவது எப்போது..?
மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் இதனை உடனடியாக அமலுக்கு கொண்டு வர இயலாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகுதான் இந்த ஒதுக்கீடு மசோதாவை செயல்பாட்டுக்கு அரசு கொண்டு வரும் என கூறப்படுகிறது. வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த சட்ட மசோதா அமல் படுத்தப்பட மாட்டாது என்றும் 2029ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த மசோதாவை செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க | காணாமல் போன சிறுவன் ஸ்பீக்கர் பாக்ஸில் சடலமாக மீட்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ