திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளுடன் வைர விழாவை பிரமாண்டமாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது.
இதில் 7 மாநில முதல்வர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி 1957-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டசபையில் அவர் அடி வைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது.
வைர விழாவை சிறப்பாகக் கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர்:-
"திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக நடத்த வேண்டும். மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், மாநகரம், நகர அளவிலும் பொதுக்கூட்டங்கள் மற்றும் கருத்தரங்கங்களை நடத்த வேண்டும். வைரவிழா கருத்தரங்கம் ஜூன் முதல் வாரத்தில் கருணாநிதியின் பிறந்த நாளுடன் வைரவிழா கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்து நடத்துங்கள். சென்னையில் பிரமாண்டமான வகையில் கருணாநிதி வைரவிழா கருத்தரங்கம் நடத்தப்படும்.
7 மாநில முதல்வர்கள் பங்கேற்பு சென்னையில் நடைபெறவிருக்கும் வைரவிழா நிகழ்ச்சியில் ஏழு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். பஞ்சாப், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள். மாவட்ட அளவில் கட்சியின் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் இதுபோன்ற விழாவை சிறப்புடன் நடத்த வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் தெரிவித்தார்.