கரூரில் கடும் வெப்ப அலை... மதிய நேர வேலைக்கு விலக்கு அளிக்க கோரிக்கை..!!

Heat Wave in Karur: கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி, 157 ஊராட்சிகளில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 8, 2024, 01:33 PM IST
  • கோடை வெப்பம் கடந்த காலங்களை விட மிக அதிகமாக உள்ளது.
  • வெப்ப அலை வீசும் நேரத்தில் விலக்கு அளிக்க கோரிக்கை.
  • மே மாதம் 15 வரை வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கை.
கரூரில் கடும் வெப்ப அலை... மதிய  நேர வேலைக்கு விலக்கு அளிக்க கோரிக்கை..!! title=

Heat Wave in Karur: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயில் கொளுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட மாநிலம் முழுவதும் ஒரே சீராக வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் வெயிலில் வாடி வதங்கி கொண்டிருக்கின்றனர். வாட்டு வெயிலில் இருந்து தப்பிக்க கரூர் மாவட்ட தூய்மை பணியாளர்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி, 157 ஊராட்சிகளில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது பணி நேரம் என்பது கரூர் மாநகராட்சியில் காலை 6.00 மணி முதல் மதியம் 2 மணி வரையும், நகராட்சி, பேரூராட்சிகளில் காலை 6.00 மணி முதல் 11 மணி வரையும் மீண்டும் மதியம் 2:00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், ஊராட்சிகளில் காலை 6.00 மணி முதல் மதியம் 2.00 மணி மற்றும் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி என உள்ளது.

தற்போது கோடை வெப்பம் கடந்த காலங்களை விட மிக அதிகமாக உள்ளது. வெப்ப அலை வீச்சு காரணமாக, 110 டிகிரி முதல் 115 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வாட்டி வதைப்பதை பார்த்து வருகிறோம். இந்நிலை மே மாதம் 15 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலை காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதோடு,  உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | சென்னை : மஜாஜ் பெயரில் பாலியல் தொழில்.. சட்டவிரோத ஸ்பாக்களுக்கு சீல்

கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் செய்திக்குறிப்பில், மக்கள் மதியம் 12.00 மணியிலிருந்து மதியம் 3.00 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். எனவே கடும் வெப்ப அலை வீசும் நேரத்தில் விலக்கு அளிக்க ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணி கரூர் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க | தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி சிக்கிய விவகாரம்…. பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News