கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்ததால் கேரளா மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 350 பேர் பலியாகினர் மற்றும் சுமார் 700,000 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்
தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள், அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், கேரள வெள்ள நிவாரணத்திற்கு, அதிமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் ஒரு மாத சம்பளத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளனர். மொத்தம் ரூ.1.13 கோடி வழங்கப்பட்டது.
மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர், அமைச்சர் பெருமக்கள், பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நியமன உறுப்பினர் ஆகியோர் தங்களது ஒரு மாத சம்பளத் தொகையை கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கினார்கள். pic.twitter.com/KIIVsscQhl
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 17, 2018
234 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் உள்பட 117 உறுப்பினர்களை அதிமுக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.