இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்து சேவை; முழு விபரம் உள்ளே..!!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் 20,334 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 1, 2021, 09:19 AM IST
இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்து சேவை; முழு விபரம் உள்ளே..!! title=

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளின் வசதிக்காக, இன்று முதல் வரும் 3ம் தேதி வரை  தமிழகம் முழுவதும் 20,334 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 9,806 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையில்  6 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் 6 இடங்களின் விவரங்கள் பின்வருமாறு:

1. மாதவரம் பேருந்து நிலையம் - ஆந்திரா செல்லும் பேருந்துகள் பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக செல்லும்.

2. தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம் - திண்டிவனம், விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.

3. கே.கே நகர் மாநகர பேருந்து நிலையம் - பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், பேருந்துகள் கத்திப்பாரா பாலம் எஸ்.பி.படேல் ரோடு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும்.

ALSO READ | கனமழை காரணமாக ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

4. பூந்தமல்லி பேருந்து நிலையம் - ஆரணி, வேலூர்,ஆற்காடு,திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள். 

5. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையம் - திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.

6. கோயம்பேடு பேருந்து நிலையம்- மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள்.

பின்னர் தீபாவளி முடிந்து சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதலாக  பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை தயாராக இருப்பதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

ALSO READ | அதிர்ச்சி தகவல்! LPG சிலிண்டர், பெட்ரோல், டீசல்  விலை அதிகரித்துள்ளது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News