MK Stalin: தமிழ்நாடு மங்களகரமாக இருக்க மஞ்சப்பை திட்டம்! அமைச்சரின் விளக்கம்

திமுக ஆட்சியில் மகளிர்களுக்கு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாடு மங்களகரமாக அமைய வேண்டும் என்பதால் மஞ்சப்பை இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்று கூறினார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2021, 03:42 PM IST
  • தமிழ்நாடு மங்களகரமாக இருக்க மஞ்சப்பை திட்டம்!
  • அமைச்சரின் விளக்கம்
  • திமுக ஆட்சியில் மகளிர்களுக்கு செய்யப்பட்டுள்ள திட்டங்கள்
MK Stalin: தமிழ்நாடு மங்களகரமாக இருக்க மஞ்சப்பை திட்டம்! அமைச்சரின் விளக்கம் title=

கள்ளக்குறிச்சி அருகே துருகம் சாலையில் உள்ள தனியார் மைதானத்தில் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேலும் மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் 68 ஆயிரம் 879 நபர்கள்ளுக்கு 192 கோடி 49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பிஎன் ஶ்ரீதர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ வேலு (Minister Velu) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் வசந்தம். கார்த்திகேயன், உதயசூரியன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் திமுக ஆட்சியில் தான் வளர்த்தெடுக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தற்போது முதல்வராக இருக்கும் முகஸ்டாலின் அவர்தான் என்று குறிப்பிட்டார்.

ALSO READ | சேலத்துக்கு வந்தது ஒமிக்ரான்! பாதிக்கப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் அனுமதி!

வாக்கு செலுத்தும் உரிமை ஒரு காலத்தில் பட்டா நிலம் வைத்துள்ள ஆண்களுக்கு மட்டும் என இருந்ததை மாற்றி பெண்களுக்கு வாக்குரிமை உலகத்திலேயே முதன்முதலில் அளித்தது திராவிட இயக்கம் பகுத்தறிவு நீதிக்கட்சி உள்ள இந்த மண்தான் என்று தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது, கலைஞருடைய ஆட்சிக் காலத்தில்தான், ஆணுக்குப் பெண் சமம் (Gender Equality) என பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உண்டு என சட்டம் இயற்றியது. திமுக தலைவர் கலைஞருடைய ஆட்சி காலத்தில் தான் இப்படி திமுக பெண்களுக்காக செய்துள்ள திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் இன்று முதல்வர் மஞ்சள் பை இயக்கம் தொடக்க தொடங்கியுள்ளார். தமிழ்நாடு மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதால் முதல்வர் (MK Stalin) இன்று மஞ்சள் பை இயக்கம் தொடங்கியுள்ளார் எனப் பேசினார். இதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, பின்னர் ’உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கு’ மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.

ALSO READ | Crime: சந்தேக விஷத்தின் வீபரீத விளைவு! மனைவியை கொன்ற கணவன் தலைமறைவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News