Live Update: 2022 ஜூன் 15 இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 15.06.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 15, 2022, 08:04 AM IST
Live Blog

 

15 June, 2022

  • 21:15 PM

    இந்திய அணிக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியா!

    இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (C), புவனேஷ்வர் குமார் (WC), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (WK), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆர் பிஷ்னோய், ஹர்ஷல் படேல் , அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

     

  • 20:30 PM

    பொள்ளாச்சியில் மாநிலத் தூய்மைப் பணியாளர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்,அரசு அதிகாரியின் அலட்சியத்தால் கோவை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் என அறிவிப்பு.

  • 20:30 PM

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - OPS

  • 20:15 PM

    இது ஏதோ சாதாரணமாக சட்ட விதிகளை மட்டும் மீறப்பட்டதாக தெரியவில்லை, உ.பி.-யில் நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது வேண்டுமென்றே சட்டத்தை மீறப்பட்டதாக உள்ளது: உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர்

     

  • 19:30 PM

    திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் புதிய கட்டிடம் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் வருகை தர இருக்கும் நிலையில் அமைச்சர் ஏவா வேலு ஆய்வு மேற்கொண்டார்

  • 19:00 PM

    அசுரன் பாணியில் நடந்த சோகம்

    திருத்துறைப்பூண்டி அருகே கோயில் திருவிழா தகராறில் மகனுக்காக, இளைஞர்கள் காலில் விழுந்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார்.

  • 18:45 PM

    ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் டாப் ஹீரோ படங்கள்!

    சில முன்னணி தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளன.

  • 18:30 PM

    மயிலாடுதுறை அருகே திருமணமாகி மூன்று மாதங்களில் வெளிநாடு சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழப்பு. மகன் சாவில் மர்மம் உள்ளதாகவும் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை

     

  • 18:30 PM

    பில்லூர் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தமிழக நகராட்சித்துறை அமைச்சர் நேரு பேட்டி.

  • 18:00 PM

    மன அழுத்தத்தை குறைக்க கைதிகளுக்கு சிறப்பு யோகா வகுப்பு

    குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாடும்  சிறை கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 26 சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. 

  • 17:45 PM

    சரத்பவார் மறுப்பு

    குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் சரத்பவாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என ஆலோசனை. ஆனால், குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிற்கவில்லை என சரத்பவார் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்

  • 17:45 PM

    அயர்லாந்து அணி அறிவிப்பு 

    இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்கும் அயர்லாந்து அணி அறிவிப்பு. அன்ரூ பால்பிரைன் அயர்லாந்து அணியின் கேப்டனாக நியமனம்

  • 17:30 PM

    பரூக் அப்துல்லா பெயர் பரிந்துரை

    குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பெயரை முன்மொழிந்துள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 

  • 17:15 PM

    அமைச்சர் கே.என்.நேரு தகவல்

    பில்லூர் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தமிழக நகராட்சித்துறை அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.  கோவை மாநகராட்சியில்  உள்ள 100 வார்டுகளுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளார்

  • 17:15 PM

    எதிர்க்கட்சிகள் ஆலோசனை 

    குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சி வேட்பாளர் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் எதிர்கட்சிகளுடனான ஆலோசனை தொடங்கியது. 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஆம்ஆத்மி, டிஆர்எஸ், சிரோன்மணி அகாலி தளம் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு

  • 16:45 PM

    காங்கிரஸ் கட்சியினர் கைது 

    காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து அக்கட்சியின் தொண்டர்களையும் தலைவர்களையும் விரட்டி விரட்டி கைது செய்யும் டெல்லி காவல்துறையினர் எங்கள் அலுவலகத்திற்குள் நுழையாதீர்கள் என காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் வாசலை மறித்தப்படி முழக்கம். 

  • 16:15 PM

    ராகுல்காந்தி எச்சரிக்கை

    இந்தியா இரண்டு முனைகளில் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், ராணுவத்தில் சமரசம் செய்யக்கூடாது. அக்னிபத் திட்டம் நமது ஆயுதப்படைகளின் செயல்பாட்டைக் குறைக்கும். படைகளின் மரபு, வீரம், கண்ணியம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பா.ஜ.க நிறுத்த வேண்டும்

  • 16:00 PM

    ரஜினிகாந்த் - சங்கர் சந்திப்பு 

    சிவாஜி தி பாஸ்’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இயக்குநர் சங்கர், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்

     

  • 16:00 PM

    காவிரி நதிநீர் மேலாண்மை கூட்டம் ஒத்திவைப்பு

    நாளை நடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • 15:45 PM

    சாய்பல்லவி மீது கடும் விமர்சனம்

    காஷ்மீர் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் இப்போது தாக்கப்படுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என சாய்பல்லவி கூறியிருக்கிறார். மதங்களை கடந்து அனைவரையும் மனிதர்களாக நாம் பார்க்க வேண்டும் என அவர் கூறியதை, ஒரு சிலர் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.

  • 15:45 PM

    சென்னை இளைஞர் உயிரிழப்பு 

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே சுற்றுலா வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் சென்னையை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 15:45 PM

    பா.ஜ.க எம்.ஆர் காந்தி எச்சரிக்கை 

    கோயில்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இந்து அமைச்சர்கள் வந்து துவங்கி வைப்பதை பாஜக வரவேற்கும். பிற மதநம்பிக்கை கொண்ட அமைச்சர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை கோயில் நிகழ்ச்சிகளில் அனுமதிக்கமாட்டோம் என பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி எச்சரிக்கை 

  • 15:30 PM

    மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை 

    மாணவச் செல்வங்கள் இந்த வயதில் படிப்பில் நாட்டம் செலுத்தினால் மட்டுமே அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும்.  முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

  • 15:00 PM

    எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷன்; அமைதி காக்கும் ஓ. பன்னீர்செல்வம்!

     

  • 15:00 PM

    காஞ்சிபுரம் மாவட்ட கல்வி துறை அசத்தல்:

    அரசு பள்ளியில் புதிதாக ஒன்றாம் வகுப்பு சேர்ந்துள்ள மாணவ,மாணவிகளை உற்சாகத்துடன் வரவேற்க்கும் வகையில் அவர்களுக்கு அருகிலுள்ள கோவிலிருந்து மாலை அணிவித்து மலர் தூவி பள்ளிக்கு வரவேற்றனர்.மேலும் மாணவ,மாணவியர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குரு மரியாதை செய்யும் வகையில் சீர்வரிசைகளுடன் ஊர்வலத்தில் பங்கேற்று பள்ளிக்கு வந்தடைந்தனர்.

  • 14:30 PM

    ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி

    இந்தியாவிலிருந்து கோதுமை, கோதுமை மாவு, கோதுமை தொடர்பான பொருட்களின்  ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதியை அடுத்த 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

     

  • 14:15 PM

    மது விற்பனையில் புதிய நடைமுறை

    கொடைக்கானலில் 10 அரசு மதுபான கடைகளில் பாட்டில்கள் திரும்ப பெரும் நடைமுறை அமல். பாட்டில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக கட்டணம் செலுத்திய பிறகு மதுபாட்டில்கள் வழங்கப்படுகிறது

  • 14:15 PM

    தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம்

    அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்றம்  வேதனை தெரிவித்துள்ளது. 

  • 14:00 PM

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

    தமிழகத்தில் திட்டமிட்டபடி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (ஜூன்17) வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • 13:45 PM

    தாராபுரம் சாலை விபத்து

    தாராபுரத்தில் சொகுசு கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற முதியவர் தூக்கிவீசப்பட்டு பலியானார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன

  • 13:30 PM

    அதிமுகவில் சலசலப்பு

    பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக அதிமுக முக்கிய தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த அதிமுக முக்கிய தலைவர்கள் முயற்சி 

  • 13:15 PM

    ஜோதிமணி பகீர் குற்றச்சாட்டு 

    சட்டத்திற்கு விரோதமாக எனது உடைகளை கிழித்து, ராணுவத்தின் உதவியோடு என்னை  கைது  டெல்லி காவல்துறை ஒரு மணி நேரமாக எங்கோ அழைத்து சென்றுகொண்டுள்ளனர். ஒரு மணி நேரமாக தண்ணீர் கேட்டும் தொடர்ந்து தர மறுக்கின்றனர். இது குறித்து நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகாரளித்துள்ளேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே நரேந்திர மோடியின் ஆட்சியில் இதுதான் நிலை என்றால் சாதாரண பெண்களுக்கு, எதிர்க்கட்சியை சேந்தவர்ககளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?

  • 13:15 PM

    அரசுப் பள்ளிக்கு பூட்டு 

    புதுக்கோட்டை மாவட்டம், கறபக்குடி அருகே அரசுப் பள்ளிக்கு சின்னய்யா நடேசன் என்பவர் பூட்டு போட்டார். அந்த இடம் தன்னுடையது எனக்கூறி அரசுப் பள்ளி மாணவர்களை சாலையில் அமர வைத்ததார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

     

  • 13:00 PM

    தகவல் தொழில்நுட்பவியல் துறை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம்

    தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறையை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 

  • 12:30 PM

    குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை

    குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்குவதற்கு விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • 12:30 PM

    கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா, கழக அரசின் ஓராண்டு சாதனை: விளக்க கூட்டம்

    தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா மற்றும் கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்று வருகிறது. 

  • 11:45 AM

    சென்னை: பின்னணி குரல் பெண் கலைஞரை காதலித்து மோசடி செய்த நபர் கைது

    சென்னையில் பின்னணி குரல் பெண் கலைஞரை காதலித்து மோசடி செய்த விக்ரம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்ததை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

  • 11:45 AM

    நாமக்கல்: பொதுமக்கள் மறியல் போராட்டம்

    நாமக்கல் மாவட்டம் வெப்படையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்பு செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  • 11:30 AM

     ‘தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே!’  தெறிக்கவிடும் வால் போஸ்டர்கள்

    அதிமுகவின் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில் "தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே", “அம்மா அவர்களின் அரசியல் வாரிசு, ஐயா ஓபிஎஸ்" என்ற ஓபிஎஸ் ஆதரவு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

  • 11:00 AM

    காவல் நிலையத்தில் வார்டு கவுன்சிலர் புகார்

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் பிரச்சினை குறித்து மனு கொடுக்க சென்ற வார்டு கவுன்சிலரை தரக்குறைவாக பேசியதாக காவல் நிலையத்தில் வார்டு கவுன்சிலர் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 11:00 AM

    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆலோசனை
    மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது

  • 10:30 AM

    தங்கம் விலை குறைந்தது 

    சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 4,715 ஆகவும் சவரணுக்கு ரூ.37,720 ஆகவும், 18 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 3,862 ஆகவும் விற்பனையில் உள்ளது. 

  • 10:30 AM

    பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்:

    பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி மற்றும் 11.45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி மற்றும் 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (புதன்கிழமை) முதல் 18-ந் தேதி வரையும், 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் என 7 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

  • 10:30 AM

    மாநில கல்விக் கொள்கை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

    தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். அனைவருக்கும் உயர்கல்வி, தேர்வு முறைகளில் மாற்றம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த கல்விக் கொள்கையைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

  • 10:00 AM

    61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு புறப்பட்ட மீனவர்கள்
    தமிழகத்தில் 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. தடைக்காலம் முடிந்ததால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

  • 09:30 AM

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
    தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  • 09:00 AM

    மாநில கல்விக் கொள்கை - முதல்வர் இன்று ஆலோசனை
    மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

  • 08:30 AM

    எம்.ஜி.எம் குழும இடங்களில் வருமான வரி சோதனை
    தமிழகம் முழுவதும் எம்.ஜி.எம் குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் தற்போது வருமான வரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெங்களூரில் உள்ள எம்ஜிஎம்-க்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை தகவல்.

  • 08:00 AM

    ஜூன் 15 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்
    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Trending News