நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் ஏகப்பட்ட குளறுபடி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

Lok Sabha Elections: காஞ்சிபுரம் சித்ராகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின்பு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 23, 2024, 01:10 PM IST
  • தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் குளறுபடியாக இருந்தது: தாகவும்,கடம்பூர் ராஜு
  • ஒவ்வொரு தொகுதிகளிலும் 10,000 முதல் 15,000 வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளன: தாகவும்,கடம்பூர் ராஜு
  • கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியிலும் இரண்டு லட்சத்து 67 ஆயிரம் வாக்குகள் இருந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளில் 14 ஆயிரம் வாக்குகள் காணவில்லை: தாகவும்,கடம்பூர் ராஜு
நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் ஏகப்பட்ட குளறுபடி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு  title=

Lok Sabha Elections: முக்தி தரும் தலங்கள் ஏழினுள் முதன்மையானது காஞ்சி என்பர். அச்சிறப்பு பெற்ற கோவில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற கோவில்களில், தென்னிந்தியாவிலேயே சித்ரகுப்தருக்கென தனி சன்னதியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகாமையிலுள்ள நெல்லுகாரத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி  திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதில்  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலை முதலே சித்ரா குப்த்தரை நீண்ட வரிசையில் காத்திருந்து  சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, அதிமுக காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட அதிமுகவினர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகந் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். மேலும் சித்ரா பௌர்ணமி சிறப்பு தரிசனம் மேற்கொண்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அளித்த பேட்டியில், "தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகுந்த குளறுபடியாக உள்ளது. வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் 10,000 முதல் 15,000 வாக்காளர் பெயர்கள் விடுபட்டுள்ளது. உதாரணமாக என்னுடைய கோவில்பட்டி தொகுதியிலும் நான் சட்டமன்ற வேட்பாளராக 2021 இல் போட்டியிடும் போது இரண்டு லட்சத்து 67 ஆம் வாக்குகள் இருந்தன. இந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு 2 லட்சத்து 53 ஆயிரம் வாக்குகள் தான் இருக்கின்றன. 14,000 வாக்குகள் குறைந்துள்ளன. இதே போன்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 12 ஆயிரம் முதல் 15,000 வாக்குகள் மாயமாகியுள்ளன. 

இதை நிச்சயமாக தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். வாக்குப்பதிவு நடந்த அன்று அவர்கள் கொடுத்த கணிப்பு 77 சதவீதம் என்று இருந்தது. மறுநாள் காலையில் பார்த்தால் இரவில் ஒரு கணிப்பு, காலையில் ஒரு கணிப்பு என கூறுகிறார்கள். நிறைய குளறுபடி உள்ளது. நிறைய வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. இனி தேர்தல் கமிஷன் எதிர்காலத்தில் தனது கடமையை ஒழுங்காக செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிகபட்சமாக தமிழகத்தில் 2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஹேர்தல் ஆணையம் விழிப்போடு வருங்காலத்திலாவது சரிசெய்து செயல்பட வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க | சாதிய கொலை வழக்கு! கணவன் கொலை-மனைவி தற்கொலை..மனதை உலுக்கிய கடைசி கடிதம்..

மேலும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும், தற்போது நடைபெறுகின்ற விடியா திமுக ஆட்சியின் அவலங்கள், சோதனைகள், மக்கள் படும் துன்பங்கள், சட்டம் ஒழுங்கு சீரழிவு, விலைவாசி உயர்வு, தமிழகம் போதைப்பொருள் கிடங்காக மாறி வருகின்றதாகவும், விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட அடுக்கடுக்கான சுமைகள் மக்கள் மீது சுமத்துகின்ற இந்த வீடியா ஆட்சியில் மக்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அதன் வெளிப்பாடு இந்த தேர்தலில் வெளிப்படும் என்றும், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நான்காண்டு கால நல்லாட்சி மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் அதிமுகவுக்கு வெற்றியை தேடி தரும் என்றும் கூறினார். மேலும் அதிமுக கூட்டணி 30க்கும் அதிகமான இடங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.

மேலும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிருப்பதாகவும், நேற்று கூட கும்பகோணத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் பட்டப் பகலில் ரௌடிகளால் வழிமறிக்கப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்டதாகவும், தற்போதுள்ள நிலைமையில் திமுகவினர் மக்களை நம்பவில்லை என்றும் தேர்தலில் 300 மற்றும் 500 ரூபாய் நம்பி தேர்தலை சந்திப்பதாகவும், மக்களை நம்பி அதிமுக தேர்தல் இறங்கியுள்ளதாகவும், இந்த தேர்தலில் மக்கள் வெற்றி பெறுகிறார்களா அல்லது 300,500 வெற்றி பெறுகின்றதா என்பது தான் கேள்வியாக உள்ளது என்றும் அவர் கூறினார். "நிச்சயமாக ஜனநாயகம் வெற்றி பெறும், மக்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்ற நிலையில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மேலும் கூறினார். 

இந்த நிகழ்வில் அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யூ.எஸ் சோமசுந்தரம், பகுதி செயலாளர்கள் பாலாஜி, கோல்டு ரவி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News