ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு... கொள்ளையனாக மாறிய நபர்

ஆன்லைன் சூதாட்டத்தில் இரண்டு லட்சம் ரூபாய்வரை இழந்ததால் இஸ்மாயில் என்பவர் கொள்ளையடித்து சிறை சென்றிருக்கிறார்.b

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 4, 2022, 09:10 PM IST
  • ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் பணம் இழக்கின்றனர்
  • சென்னையில் ஒருவர் 2 லட்சம் ரூபாய்வரை இழந்திருக்கிறார்
  • இதன் காரணமாக தான் வேலை பார்த்த வீட்டில் கொள்ளையடித்திருக்கிறார்
 ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு... கொள்ளையனாக மாறிய நபர் title=

சென்னை வேளச்சேரி, ஷேசாத்ரிபுரம் பிரதான சாலையில் 68-வயதான மூதாட்டி இந்துமதி தனியாக வசித்துவந்தார். இவரது வீட்டில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கார் ஓட்டுநராக இஸ்மாயில் என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்துமதியின் அக்கா வீட்டில் வீட்டு வேலை செய்து வரும் விஜி (இஸ்மாயிலின் மனைவி) பரிந்துரையின் பேரில்  கார் ஓட்டுநராக இஸ்மாயில் பணிபுரிந்துவந்துள்ளார். நாளடைவில் இந்துமதி வீட்டிலும் ஓட்டுநராக பணிபுரிந்தார். சூழல் இப்படி இருக்க இஸ்மாயில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி ரூபாய் 2 லட்சம்வரை பணத்தை இழந்ததாகவும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் கூறப்படுகிறது.. 

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நிலையில் நண்பரோடு வடபழனியில் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு 35-வயதான சலாம் என்பவர் அறிமுகமாகியுள்ளார். மது போதையில் இருந்த இஸ்மாயில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 2 லட்சம் பணத்தை இழந்தது குறித்தும் வேலையில்லாமல் திண்டாடுவது குறித்தும் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும் சலாமிடம் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | விமான நிலையத்துக்காக வேளாண் நிலங்களை அழிக்கக்கூடாது - சீமான் வலியுறுத்தல்

இதை கேட்ட சலாம் இந்த பிரச்னையில் இருந்து மீள ஒரு வழி உள்ளது. திருடி பணம் சம்பாதிக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து திருடுவதற்கான திட்டம் தீட்டியுள்ளனர். அப்போது இஸ்மாயில் அவ்வப்போது கார் ஓட்ட செல்லும் மூதாட்டி இந்துமதிவுடன் யாரும் இல்லை என்பதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு  நகையை பறிக்க திட்டமிட்டு கடந்த 30ஆம் தேதி இருவரும் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த வளையல், தங்கச்சங்கிலி, கம்பல் என 14 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி இந்துமதி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு தனிப்படை அமைத்து சம்பவ இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளைப் பார்த்த மூதாட்டி, கொள்ளையர்களில் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த கார் ஓட்டுனர் போல் இருப்பதாக கூறியுள்ளார்.  

மேலும் படிக்க | அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில்  போலீசார் சென்னை சைதாபேட்டை காவாங்கரையை சேர்ந்த இஸ்மாயில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவருடைய செல்ஃபோன் வீட்டில் இருந்தது. ஆனால் அவர் இல்லை. எனவே காவல் துறையினருக்கு சந்தேகம் வலுத்து விசாரணையில் இறங்கினர். அப்போது, இஸ்மாயில் தேனிக்கு சென்றது தெரியவந்தது. 

மேலும் இஸ்மாயில் எப்பொழுதும் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு நபரிடம் புதிய சிம் கார்டுகளை வாங்குவது வழக்கமாக வைத்துள்ளார். இதை அறிந்த போலீசார் அந்த நபர் மூலம் புதிய சிம்கார்டு வாங்க வருமாறு இஸ்மாயிலை சென்னை வரவழைத்தனர். கூட்டாளி சலாமுடன் சென்னை வந்த இஸ்மாயிலையும் சலாமையும் போலீசார் கைது செய்தனர். 

காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 2 லட்சத்தை இழந்ததாகவும், வேலை இல்லாத சூழ்நிலையாலும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி முதலில் மூதாட்டியிடம் தங்களது கைவரிசையை காட்டினோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

பின்னர் கொள்ளையடித்த 14 சவரன் தங்க நகைகளை போலீசார் இஸ்மாயில் சலாமிடமிருந்து பறிமுதல் செய்தனர். இதில் சலாம் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News