டெண்டர் விவகாரம்: முதல்வர் எடப்பாடி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Last Updated : Oct 12, 2018, 03:00 PM IST
டெண்டர் விவகாரம்: முதல்வர் எடப்பாடி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு title=

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளார். மேலும், ஒரு வாரத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டு உள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும் என்றும் இதில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Trending News