கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17ம் தேதி பள்ளி வளாகத்தில் வன்முறை வெடித்தது. பள்ளியில் இருந்த பொருட்கள், காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக சின்னசேலம் போலீசார் பதிவு செய்த வழக்கில் கைது விழுப்புரம் மாவட்டம், தொழுவந்தாங்கலைச் சேர்ந்த தந்தைப் பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பிரபு, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வன்முறை நிகழ்ந்த போது சம்பவ இடத்தில் தான் இல்லை எனவும், எந்த வாட்ஸ் ஆப் குழுவுக்கும் தான் அட்மின் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முதலில் குமார் என்பவரை முதல் எதிரியாக குறிப்பிட்டிருந்த போலீசார், பிறகு உள்நோக்கத்துடன் தன்னை முதல் எதிரியாக சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் காவல் ஆய்வாளரை தாக்கியதுடன், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தியுள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | ஜெயிலர் வீட்டிற்கு தீ - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 50 ஆயிரம் ரூபாயை வழக்கு எண் பெயரில் டிபாசிட் செய்யும்படி கூறி, பிரபுவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஆறு வாரங்களுக்கு தினமும் காலை, மாலை என இரு வேளையும் சின்னசேலம் போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், அதன் பின் விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | செவிலியரின் முகத்தை கடித்து குதறிய நபர்... விருதுநகரில் பரபரப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata