காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கல்விக்கூடத்தில் மேக்னிபிசன்ட் அரங்கில் MAHER ன் 16 வது பட்டமளிப்பு விழா, டிசம்பர் 23, 2022 அன்று கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, விழா நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த MAHER ன் நிறுவனரும் வேந்தருமான திரு. ஏ.என். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
MAHER - ன் கௌரவ இடைக்கால வேந்தர் ஆன திருமதி. கோமதி ராதாகிருஷ்ணன் அவர்கள், இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து துடிப்பு மிக்க பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் டி. சாந்தாராம் M. D., D. Diab., அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்.
MAHER - ன் நிர்வாக வேந்தர் திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்கள், குழுமி உள்ளோரை வரவேற்றுப் பேசினார். அவர் தமது உரையில், இந்த சிறப்பு மிக்க நாட்டின் இளையஞர்களுக்கும் இளைஞியருக்கும் அவர்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ற, உகந்த, நவீன யுக கல்வியை அளிக்க வேண்டும் என்கிற பெரும் குறிக்கோளுடன் 2004 ஆம் ஆண்டு MAHER தொடங்கப்பட்டது. MAHER ன் அந்த தொலைநோக்கு கனவு இப்பொழுது நிறைவேறி உள்ளது என்றே கூற வேண்டும் என்று கூறினார்.
MAHER ன் ஆண்டு அறிக்கையை துணை வேந்தர் டாக்டர் ஆர்.எஸ். நீலகண்டன் அவர்கள் சமர்ப்பித்தார். அவர் பேசுகையில், இந்த 16 வது பட்டமளிப்பு விழாவில், இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் 25 முனைவர் படிப்பு படித்தவர்கள் உள்ளிட்ட 1058 மாணவமணிகள் பட்டம் பெற்று சமுதாயத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானத்தில் இங்கு கட்டமைப்பு வசதிகளும் ஆய்வக சாதனங்களும் புதிதாக ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.
MAHER ன் பதிவாளர் பேராசிரியை டாக்டர் சி. கிருத்திகா அவர்கள், தலைமை விருந்தினர் பேராசிரியர் டாக்டர் டி. சாந்தாராம் M. D., D. Diab அவர்களைப் பற்றி அவையினருக்கு அறிமுகம் செய்து உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிட்டார்.
தலைமை விருந்தினர் பேராசிரியர் டாக்டர் டி. சாந்தாராம் M. D., D. Diab அவர்கள், MAHER ன் அங்கங்கள் ஆக உள்ள கல்லூரிகளின் மகத்தான செயல்பாடுகளைப் பாராட்டியதுடன் அவை பெற்ற பல்வேறு விருதுகள் /அங்கீகாரங்கள் பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார். அவர், புதிதாக பட்டம் பெற்றவர்கள் தங்கள் உத்யோக வாழ்வில் சேவை உணர்வுடன் பணியாற்றி உயரங்களைத் தொட வேண்டும் என்று வாழ்த்தினார்.
பல்வேறு படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிறகு, கல்வியில் சாதனை படைத்த 75 நபர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. MAHER ன் தலைசிறந்து விளங்கிய ஒன்பது முன்னாள் மாணவர்களுக்கு திருமதி. கோமதி ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரிலான சிறப்பு அலும்னி விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த பட்டமளிப்பு விழாவில், டாக்டர் பாஷி வி. வேலாயுதம் அவர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, அன்னார் இதய நோய் அறுவை சிகிச்சை துறையில் ஆற்றிய மகத்தான பங்குபணியைப் போற்றும் வகையில் DSc Honoris Causa என்கிற உயரிய கல்வி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிர்வாக வேந்தர் திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரிலான மகத்தான மனித குல சேவை விருது, அடித்தட்டு மக்களுக்கு தன்னலமற்ற சேவை புரிந்து வரும் பாலம் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் பட்டமளிப்பு விழா முடிந்ததாக இடைக்கால வேந்தர் அறிவித்தார். அதன் பின்னர், நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு : 1000 ரூபாய்க்கு எப்போது டோக்கன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ