கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில், ரூ.39 கோடியில் 2.21 ஏக்கர் பரப்பில் நினைவிடம் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது, அவர் பயன்படுத்திய பேனாவும் உடன் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
இந்தச் சூழலில் பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை கருணாநிதி நினைவிடம் அருகில் கடலுக்குள் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 137 அடி உயரத்தில் பேனா போன்ற நினைவுச்சின்னம் கடலுக்குள் புல்வெளிகள் நடுவில் அமைக்கப்பட உள்ளது.
கருணாநிதியின் நினைவிடத்தின் உள்ளே இருந்து, கடலின் மேல் 360 மீட்டர் தூரம் சென்று பேனா நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் ரசிக்கும் வகையில், கண்ணாடி தளத்தில் பாலம் அமைக்கப்படும். இந்த பாலத்தில் கடலை ரசித்தபடி பொதுமக்கள் செல்ல முடியும். ரூ.81 கோடியில் பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்துக்கு சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு திமுகவினர் ஆதரவு தெரிவிக்க பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். மேலும், அரசுக்கு ஏற்கனவே கடன் சுமை இருக்கும் நேரத்தில் இதெல்லாம் தேவையா எனவும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பேனா சிலையெல்லாம் நிறுவ முடியாது. நான் நிறுவவிட மாட்டேன். இப்போது பேனா வைப்பீர்கள் பிறகு கண்ணாடி வைப்பீர்கள்.
மேலும் படிக்க | பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்
நாளை உதயநிதி முதலமைச்சரானால் எனது தந்தையின் விக் என்று ஒன்றை கடலுக்கு நடுவே கொண்டு சென்று வைப்பார். யாருடைய பணம் இது. சமாதியில் வடை, காபி வைப்பதையே நான் திட்டிக்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் தேவையில்லாத சேட்டை” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ