மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி!

புதிதாக உருவாகும் மயிலாடுதுறையும் சேர்த்து தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆகிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Mar 24, 2020, 12:14 PM IST
மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி! title=

புதிதாக உருவாகும் மயிலாடுதுறையும் சேர்த்து தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆகிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிவிப்பின் படி, தமிழகத்தில்  38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை. நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து, மயிலாடுதுறையைத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில், தமிழகத்தில் பெரிய மாவட்டங்களாக இருந்த விழுப்புரம் மாவட்டம் அண்மையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதேபோல், வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டமாக பிரிக்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி, தென்காசி என இருமாவட்டங்களாக உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டதால் தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ள, நிலையில் 38-வது மாவட்டமாக தற்போது மயிலாடு துறை உருவாக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சட்டசபையில் இன்று விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தை நாகப்பட்டினம் மயிலாடுதுறை என இரண்டாக பிரித்து இரண்டு தனி தனிமாவட்டங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். இதன்படி, மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமையும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதன் படி, தமிலகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை மொத்தம் 38 ஆக உயர்ந்துள்ளது.  

Trending News