மயிலாடுதுறை : நிலத் தகராறில் தலையிட்டு மனித உரிமை மீறல் - டி.எஸ்.பிக்கு செக்..!

நிலத் தகராறில் தலையிட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்ட டி.எஸ்.பி.-யின் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : May 11, 2022, 07:52 PM IST
  • மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட பெண்
  • இடப்பிரச்சினையில் தலையிட்ட டி.எஸ்.பி
  • துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு
மயிலாடுதுறை : நிலத் தகராறில் தலையிட்டு மனித உரிமை மீறல் - டி.எஸ்.பிக்கு செக்..! title=

மயிலாடுதுறையை அடுத்த கூறைநாடு பகுதியைச் சேர்ந்த கல்யாணி என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், சீனிவாசன் என்பவருடன் இடப்பிரச்சினை தொடர்பாக மயிலாடுதுறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சீனிவாசனுடன் கூட்டு சேர்ந்து நாகப்பட்டினம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு பொறுப்பு டி.எஸ்.பி. டி.சுவாமிநாதன் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, கைது செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தியபோது, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்துவிட்டதாகவும், அதனால் டி.எஸ்.பி. சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், சிவில் பிரச்சினையில் டி.எஸ்.பி. சுவாமிநாதன் தேவையில்லாமல் தலையிட்டு, மனுதாரர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து  மன உளைச்சலை ஏற்படுத்தியது மனித உரிமை மீறல் என நிரூபணம் ஆவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | இலங்கையிலிருந்து தப்பித்த சிறை கைதிகள் - தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..!

இந்நிலையில், மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட கல்யாணிக்கு இழப்பீடாக 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும், இந்த தொகையை டி.எஸ்.பி. சுவாமிநாதனிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | கத்தியால் வெட்டிய கணவரை திரும்ப குத்திக் கொன்ற மனைவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

 

Trending News