விருப்பமனு கட்டணத்தை திரும்ப பெறலாம் என திமுக அறிவிப்பு..!

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கட்டணத்தை திரும்பபெறலாம் என திமுக அறிவித்துள்ளது!

Last Updated : Nov 22, 2019, 10:34 AM IST
விருப்பமனு கட்டணத்தை திரும்ப பெறலாம் என  திமுக அறிவிப்பு..! title=

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கட்டணத்தை திரும்பபெறலாம் என திமுக அறிவித்துள்ளது!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள்  விருப்ப மனு விநியோகத்தை துவங்கியுள்ளன.   

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி மேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பம் விநியோகம் செய்தது. 

இந்நிலையில், மேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, நேரடி தேர்தல் நடைபெறாமல், மறைமுக தேர்தல் நடைபெற இருப்பதால், மேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான விருப்ப மனு கட்டணத்தை திரும்பப் பெறலாம்  என திமுக அறிவித்துள்ளது. மேலும், ரசீதை கொடுத்து நவம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்டணத்தை திரும்ப பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.  

 

Trending News