டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறப்பு...

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!

Last Updated : Aug 12, 2019, 10:46 AM IST
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறப்பு... title=

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!

சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டிய நிலையில், நாளை அணையின் கொள்ளளவு 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையால் கர்நாடக மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதும் பாதுகாப்புக் காரணத்துக்காக காவிரியில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்த அதிகரிக்கப்பட்டு வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 85 அடியை எட்டியுள்ளது. தமிழகத்திற்கு வரும் அதிகப்படியான காவிரி நீரால் ஒகேனக்கல் அருவிகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து சுமார் 2,20,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. அணைக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Trending News