விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து புனித ரமலான் மாத நோன்பு திறக்கும் இக்தார் நிகழ்ச்சி இன்று மாலை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் விசிக வேட்பாளர் துரை ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செஞ்சி மஸ்தான் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருவதற்கு முன்பே பேசத் தொடங்கினார். மஸ்தான் பேசிக் கொண்டிருந்த பொழுது அமைச்சர் பொன்முடி உள்ளே வந்தார்.
மேலும் படிக்க | TN Lok Sabha Election 2024: வேலூரில் திமுக வேட்பாளரிடம் சரமாரி கேள்வி
அப்பொழுது கட்சிக்காரர் ஒருவர் அமைச்சர் வருகிறார் பேச்சை சற்று நிறுத்துங்கள் என கூறினர். இதனை கண்டு கொள்ளாத அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடர்ந்து பேசினார். அவர் பேசி முடித்தவுடன் கடுகடுப்பாக இருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசி முடிக்கும் முன்பே அவரது மைக்கை பிடுங்கினார். மைக்கை பிடுங்கியது மட்டுமில்லாமல் செஞ்சி மஸ்ஸானை கண்டபடி திட்டினார். செஞ்சி மஸ்தான் தான் பேசியது குறித்து விளக்கம் தெரிவித்தபோதும், அதனை ஏற்க மறுத்த பொன்முடி அவரை கடுமையாக சாடினார். இதில் மேடையில் இருந்தவர்கள் அனைவரும் அதனைப் பார்த்து முகம் சுளித்தனர்.
அது மட்டும்இன்றி நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தவர் ஆத்திரம் தாங்க முடியாமல் மறுபடியும் கண்டபடி திட்டி விட்டு சென்றார். இதனை கண்ட கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சமீபகாலமாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இருக்கும்பொழுது விழுப்புரம் பகுதியில் செஞ்சி மஸ்தான் திமுகவின் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என மறைமுக உத்தரவு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் விழுப்புரத்தில் நடைபெற்ற எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
தற்பொழுது இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. செஞ்சி மஸ்தானும் இதனடிப்படையிலேயே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியிலேயே அமைச்சர் பொன்முடி அவரை சராமரியாக பொது இடம் என்றும் பாராமல் திட்டியது முஸ்லிம் சமூகத்தினருக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ