அண்ணாமலை வீடியோ
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழலை அம்பலப்படுத்தப்போவதாக கூறி, அக்கட்சியின் தலைமை பீடத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர், கனிமொழி, டிஆர் பாலு உள்ளிட்டவர்களின் சொத்து மதிப்பு பட்டியலை கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். தமிழக அரசியலில் மிகப்பெரிய புகைச்சலை ஏற்படுத்தப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலையின் இந்த நடவடிக்கை அவருக்கே இப்போது வினையாக மாறத் தொடங்கியுள்ளது.
திமுக ரியாக்ஷன்
அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் அனைவரும் அவர் மீது ஆதாரங்களைக் கேட்டு தமிழகம் முழுவதும் இருக்கும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்போவதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பதிலடி கொடுத்துள்ளார். இன்னும் 15 நாட்களுக்குள் திமுகவின் சொத்து மதிப்பு பட்டியல் என வெளியிட்ட வீடியோவுக்கு முழு ஆதாரத்தையும் அண்ணாமலை கொடுக்கவில்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் படிக்க | அண்ணாமலை குற்றச்சாட்டுகளை பார்த்தால் சிரிப்புதான் வருது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
கனிமொழி ரியாக்ஷன்
இதன் ஒருபகுதியாக கனிமொழி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை வெளியிட்ட சொத்து மதிப்பு பட்டியல் குறித்து பேசினார். அப்போது அவர் அரசியல் ஆதாயத்துக்காக சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், இது குறித்து பேச வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். அதேநேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கனிமொழி கூறியிருக்கிறார்.
சர்ச்சையில் அண்ணாமலை
இதனை தொடர்ந்து அண்ணாமலை மீது என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என திமுக முக்கிய புள்ளிகள் தீவிர ஆலோசனையில் இப்போது இறங்கியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அடுத்தடுத்து 4 சீரிஸ்களை வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்திருப்பதால், அதனை தடுக்க வேண்டும் என்று நினைக்கும் திமுக, அரசியல் களத்தில் உருவாகும் அவதூறுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற எண்ணத்திலும் இருக்கிறது. ஆதாரங்கள் இல்லாமல் பொத்தாம்பொதுவாக கூறப்பட்டிருக்கும் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் திமுக முடிவெடுத்துள்ளது. அதேநேரத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் அண்ணாமலைக்கு அரசியல் மைலேஜ் கொடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்ற முடிவிலும் இருக்கிறதாம் ஆளும் தரப்பு.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ