BJP Pon Balaganapathi About AIADMK in Nagapattinam : நாகையில் பேசிய பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பொன்.வி.பாலகணபதி, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்காது என தெரிவித்துள்ளார்.
M. K. Stalin, Salem, Lok Sabha election campaign: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் பேசும்போது, சரித்திர பதிவேடு ரவுடிகளை எல்லாம் கட்சியில் சேர்த்து கொண்டிருக்கும் பாஜக தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Annamalai: அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் பேசும்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 5 தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பையொட்டி தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை திசைதிருப்பும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளதாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக தலைமை மற்றும் குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிடிஆர் விளக்கம் அளித்த நிலையில், அவரை மட்டும் பாஜக குறிவைப்பது ஏன்? என்பதற்கு அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவல்களை பார்க்கலாம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மற்றும் பாஜக நிர்வாகிகள் சாலையில் கட்டைகளை கொண்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vanathi Srinivasan on Annamalai: அண்ணாமலை வெளியிட்ட ரஃபேல் வாட்ச் பில்லில் முரண்பாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், அதற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொடுத்திருக்கும் பதில் அண்ணாமலையையே வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது.
தன்னைப் பற்றி தவறான தகவல் கொடுத்திருக்கும் அண்ணாமலைக்கு சரமாரி கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2,438 கோடி ரூபாய் பொதுமக்களிடம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட பாஜக மாநில நிர்வாகி ஹரீஷ் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்கள் மீது அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாக காயத்ரி ரகுராம் ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை விசாரிக்க வந்த என்ஐஏ அதிகாரிகள் என நடித்து, சென்னையை சேர்ந்த ஜமால் என்பவரின் வீட்டில் சோதனை என்ற பெயரில் 20 லட்ச ரூபாயை பாஜக நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் திருடிச் சென்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.