கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் 4 மாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் பசு மாடு ஒன்று கன்று குட்டியை ஈன்றது. அப்பொழுது அந்த ஈன்ற கன்றுக்குட்டிக்கு 4 கால்களுடன் சேர்த்து உடலில் ஒரு கால்களும் இருந்துள்ளன.
மேலும் படிக்க | போலி சான்றிதழ்கள் மூலம் லோன் பெற்ற பெண் கைக்குழந்தையுடன் கைது
அந்த கன்றுக்குட்டி பிறக்கும் போதே உடலில் ஒரு கால்களுடன் இருந்ததால் மருத்துவரை தொடர்புக்கொண்டு பேசுகையில் இது மரபணு தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம் இதனால் கன்றுக்கு எந்த ஒரு உடல்நலக்குறைவும் ஏற்படாது எனவும் கன்று பெரியதானவுடன் அதை அறுவை சிகிச்சை மூலம் கால்களை அகற்றி விடலாம் எனவும் மருத்துவர் தெரிவித்ததாக கூறினார்.
இப்பொழுது அந்த கன்று நன்கு வளர்ந்து சாலைகளில் சுற்றி வருகிறது. சாலைகளில் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடங்களில் இந்த கன்று செல்வதால் அதை அனைவரும் ஆச்சிரியத்துடன் பார்த்தும் சில மக்கள் வணங்கியும் செல்கின்றனர்.
மேலும் படிக்க | திருவண்ணாமலை: 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் தீப கொப்பறை..! ஏற்பாடுகள் தயார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ