டெல்லியில் உள்ள பிரதமர் மோடி தமிழக அரசை ஆட்டுவிக்கும் ரிங் மாஸ்டர் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் மற்றும் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் காந்தி ஆகியோர் இல்லத் திருமண விழாவில் தலைமேயேற்று உரையாற்றிய திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவிக்கையில்...
"திமுக-வை கம்பெனி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகின்றார். கம்பெனி என்பது கவுரவமானது தான். ஆனால் ஆதிமுக ஒரு சர்க்கஸ் கூடாரம். அதில் எடப்பாடி பழனிசாமி ஓரு விசித்திரமான பபூன்; டெல்லியில் உள்ள மோடி மஸ்தான் ரிங் மாஸ்டர்
எல்லா துறைகளிலும் அதிமுக-வின் கொள்ளை கொடி கட்டி பறக்கிறது. கொள்ளையனே வெளியேறு என அனைவரும் முழங்கி அதிமுக அரசை அகற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்!