குரங்கம்மை பாதிப்பு... தமிழ்நாட்டில் இல்லை - பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமைச்சர் மா.சு., விளக்கம்

TN Latest News: தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை எனவும் விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் தொடர்ந்து பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Aug 30, 2024, 11:24 AM IST
  • தற்போது 123 நாடுகளில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது
  • இந்தியாவில் இதுவரை குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை
  • முதல்வர் மருந்தகத் திட்டம் வரும் பொங்கல் அன்று தொடங்கப்படுகிறது
குரங்கம்மை பாதிப்பு... தமிழ்நாட்டில் இல்லை - பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமைச்சர் மா.சு., விளக்கம் title=

TN Latest News Updates: கோவை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு (Monkey Pox) நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் (Minister Ma Subramanian) ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ள பொது மருத்துவ அவசர அறிவிப்பில், குரங்கு அம்மை நோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய நாடுகளில் தொடங்கிய இந்த பாதிப்பு உலகம் முழுவதும் தற்போது 123 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் குரங்கம்மை நோய் பாதிப்பு குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது.  

தொடர் கண்காணிப்பு

சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணித்து அவர்களுக்கு குரங்கம்மை பாதிப்புக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து, உரிய சிகிச்சை வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் இதற்கென தனி வார்டு உருவாக்கப்பட்டு அதில் மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | இந்தியாவில் குரங்கு அம்மை வைரஸை தொடர்ந்து... சண்டிபுரா வைரஸ் தாக்குதல்... எச்சரிக்கும் WHO

இத்தோடு, mass fever screening என்கிற முறையில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட துறைமுகங்களிலும் கப்பல் வழியே வரும் பயணிகளுக்கு குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

குரங்கம்மைக்கு பிரத்யேக வார்டுகள்

இதுகுறித்து விமான நிலையங்களில் குரங்கமை நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்பட்டு நோய்க்கான அறிகுறிகள் குறித்து பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எடுத்துரைக்கப்படுகிறது. குரங்கம்மை நோய் பாதிப்பு என்பது தொற்றுநோய் என்பதால் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் இதற்கான பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளா உட்பட இந்தியாவில் இதுவரை குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை. இருந்தாலும் தமிழக கேரள எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பினை செய்து வருகிறோம்" என்றார்.

மருத்துவர்களின் பாதுகாப்பு

தொடர்ந்து, மாநில அரசின் மலிவு விலை மருந்தகங்கள் குறித்த கேள்விக்கு,"முதல்வர் மருந்தகத் திட்டம் வரும் பொங்கல் தினத்தன்று தொடங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட உள்ளன. இதில் மிகக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். எந்தெந்த இடங்களில் இந்த மருந்தகங்களை அமைக்கலாம், என்னென்ன மருந்துகள் அடிப்படையாக தேவைப்படுகிறது என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு இதேபோல் மலிவு விலை மருந்தகங்களை நடத்தி வருகிறது. இவை மக்கள் மருந்துக்காக செலவிடம் கட்டணம் கட்டாயம் குறைக்க உதவும்" என்றார். 

கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுவது குறித்த கேள்விக்கு,"மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சிசிடிவி பொருத்தப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்களில் கூட சில மணி நேரங்களில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்டுள்ளது" என தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், "இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உரிய அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவ மருத்துவமனையில் அவ்வப்போது ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்து வருகிறார்" என பதில் அளித்தார். 

கோவை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் என்றும் அது செயல்பாட்டுக்கு வரும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Mpox Update: பெரியம்மை தடுப்பூசி குரங்கு அம்மை வைரஸ் தாக்குதலை தடுக்குமா...
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News