Monsoon Alert: தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை எச்சரிக்கை

Monsoon Updates: இந்த மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் வானிலை நிலையை அறிந்து கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 25, 2021, 05:06 PM IST
  • ஜூன் 29 வரை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மழை பொழிவு அதிகரிக்கும்
  • ஜூன் 27 மற்றும் 29 என இரண்டு நாட்கள் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.
  • அடுத்த ஐந்து நாட்களில் வடகிழக்கு இந்தியாவிலும் அதிக மழை பெய்யும்.
Monsoon Alert: தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை எச்சரிக்கை title=

Monsoon Updates: அடுத்த சில நாட்களில் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி - IMD) இன்றைய (வெள்ளிக்கிழமை) வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஐ.எம்.டி தரவுபடி, ஜூன் 29 வரை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மழை பொழிவு அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. அதேநேரத்தில் ஜூன் 27 மற்றும் 29 என இரண்டு நாட்கள் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தென் குஜராத், தென்கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் சில பகுதிகளில் லேசான மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல பீகார், உத்தரகண்ட் மற்றும் ஒடிசாவின் சில இடங்களில் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மாநிலங்களில் வானிலை ஆய்வுத் துறையால் (India Meteorological Department) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை:
அடுத்த ஐந்து நாட்களில் வடகிழக்கு இந்தியாவிலும் (Northeast India) அதிக மழை பெய்யும் என்று ஐஎம்டி கூறியுள்ளது. திங்கள்கிழமை முதல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

ALSO READ | தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 நாட்களில் அசாம், மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அசாமில் மிக அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீகாரில் பருவமழை (Bihar Monsoon) குறைந்துள்ளது. ஆனால் சில பகுதிகள் இன்னும் மழையைப் பெய்து வருகின்றன. தெற்கு பீகாரில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய முழு வாய்ப்பு உள்ளது. பீகாரில் உள்ள முசாபர்பூர், நவாடா, கைமூர், ரோஹ்தாஸ், அர்வால் மற்றும் நாலந்தா மாவட்டங்களுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஜூன் 25 மற்றும் 26 தேதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாப்புள்ளது என்ற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

மஞ்சள் எச்சரிக்கை:
அடுத்த 24 மணி நேரத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் பல இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தலைநகர் டெஹ்ராடூன் மற்றும் தெஹ்ரி, பரிரி, நைனிடால், அல்மோரா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தலைநகர் 

ALSO READ |  TN Weather: இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்-IMD

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News