அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன்

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Updated: Dec 1, 2019, 03:16 PM IST
அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன்

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு பேசிய அவர்,

2 ஆயிரத்து 472 பட்டதாரி ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், வரும் நாட்களில் கணினி மற்றும் சிறப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.