ஒன்றரை வயது குழந்தைக்கு உப்மாவில் விஷம் வைத்த தாய் : தகாத உறவால் நேர்ந்த கொடூரம்..!

காதலனுக்காக ஒன்றரை வயது குழந்தைக்கு சேமியாவில் எலி மருந்து வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கொடூர தாயை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.     

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 7, 2022, 11:42 AM IST
  • குழந்தைக்கு உப்மாவில் எலி மருந்து வைத்த தாய்
  • கண்ணை மறைத்த காதலால் நடந்த கொடூரம்
  • 21 வயதான குழந்தையின் தாய் கைது
ஒன்றரை வயது குழந்தைக்கு உப்மாவில் விஷம் வைத்த தாய் : தகாத உறவால்  நேர்ந்த கொடூரம்..! title=

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். 34 வயதான இவருக்கு 21 வயதான கார்த்திகா என்ற மனைவியும், சஞ்சனா என்ற மூன்றரை வயதான ஒரு பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அந்த ஒன்றரை வயதான ஆண் குழந்தை சரண், வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு மயக்கமடைந்து விட்டதாக கார்த்திகா தனது கணவர் ஜெகதீஷூக்கு தகவல் அளித்துள்ளார்.

கூலி வேலைக்கு சென்றிருந்த கணவர் ஜெகதீஷ் குழந்தைக்கு என்ன ஆனதோ என பதட்டத்தில் அலரியடித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, குழந்தை சரண் மயக்கமான நிலையில் இருந்துள்ளார். இதனை அடுத்து குழந்தையை தூக்கிக்கொண்டு மார்த்தாண்டம் பகுதியிலுள்ள  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீஸார் ஊடற்கூறு ஆய்விற்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க  | 25 வயது பெண்ணை மணந்து வைரலான 45 வயது விவசாயி தற்கொலை!

அதனை தொடர்ந்து மருத்துவர்களிடம் போலீஸார் குழந்தையின் இறப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, குழந்தையாக விஷத்தை எடுத்து உட்கொண்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், குழந்தையின் பெற்றோரான ஜெகதீஷ் மற்றும் கார்த்திகா ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இருவரின் ஃபோன் கால் உள்ளிட்ட அனைத்தையும் சைஃபர் க்ரைம் உதவியுடன் காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.

அதில் குழந்தையின் தாய் கார்த்திகாவின் ஃபோனில் இருந்து சென்ற அழைப்புகள் அழிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் கார்த்திகாவின் மீது கவனத்தை திருப்பிய காவலர்கள் அந்த அழைப்புகள் அனைத்தையும் உற்று நோக்கி விசாரணையில் தீவிரம் காட்டியுள்ளனர். அப்போது, குழந்தை இறப்பதற்கு சற்று நேரம் முன்பு வரை சுனில் என்பவருடன் நீண்ட நேரம் கார்த்திகா ஃபோனில் பேசி இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, மாரயபுரம் பகுதியில் காய்கறிக் கடை நடத்தும் சுனிலை போலீஸார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் படிக்க  | ஆசை இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையோடு எரித்து கொன்ற கொடூரன்..!

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சுனில் என்ற அந்த நபர் கார்த்திகாவிற்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரியாமல் அவரை காதலித்ததாகவும், இது தெரிய வந்ததையடுத்து தான் கார்த்திகாவுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, சுனில் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் கார்த்திகாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது, தான் சுனிலை காதலிப்பதாகவும், குழந்தைகள் இருப்பதால் அவர் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார் என நினைத்து இரண்டு குழந்தைகளுக்கும் சேமியாவில் எலி மருந்தை வைத்து கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து போலீஸார் கார்த்திகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பெண் குழந்தை சஞ்சனா குறைவான அளவில் விஷம் கலந்த உணவை உட்கொண்டதால்  அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது. ஆனால், ஒன்றரை வயதான பச்சிளம் குழந்தை சரண் தாயின் கொடூர புத்தியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | காதல் மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த கணவன்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News