அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் எம்.பி.நவநீதகிருஷ்ணன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் இலலத் திருமண விழாவில் (27.01.2022) வியாழக்கிழமை கலந்து கொண்டார். அந்த விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய அவர், திமுக எம்.பி மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியை புகழ்ந்து பேசினார்.
ALSO READ | நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பா.ஜ.க கூட்டணி தொடருமா?
டெல்லிக்கு எம்.பியாக சென்றபோது எதுவும் தெரியாமல் இருந்த தனக்கு கனிமொழி மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் பல விஷயங்களை கற்றுக் கொடுத்ததாக கூறினார். நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருந்ததாகவும், ஒருமுறை மத்திய அமைச்சருடன் பேசத்தெரியாமல் பேசி சண்டை போட்டுக் கொண்டிருந்ததாகவும் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். அந்த நேரத்தில் கனிமொழி வந்து உதவியதாக தெரிவித்த அவர், சண்டைபோடாமல் அழுத்தம் திருத்தமாக பிரச்சனைகளை கூற வேண்டியது குறித்து சொல்லிக் கொடுத்ததாகவும் கூறினார். மேலும், மாநிலங்களவையில் பேச கற்றுக்கொடுத்தவர் கனிமொழி எம்.பி என்றும் நவநீத கிருஷ்ணன் பேசினார்.
அவருடைய நேற்றைய பேச்சு அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று நவநீதகிருஷ்ணனின் கட்சிப் பதவியை அதிமுக பறித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீத கிருஷ்ணன் எம்.பியை விடுவிப்பதாக அறிவித்துள்ளனர்.
ALSO READ | UP election: கருத்து கணிப்பா? அல்லது திணிப்பா - உ.பியில் எழும் கலக்குரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR