அமைச்சருக்கு பாடம் நடத்திய திமுக எம்.பி!

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவிற்கு திமுக நாடாளுமன்ற எம்.பி செந்தில்குமார் மறைமுகமாக பாடம் நடத்தி உள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2022, 12:23 PM IST
  • தரையில் அமர்ந்த அமைச்சர் கே.என். நேரு.
  • இணையத்தில் வைரலாக புகைப்படம்.
  • அமைச்சருக்கு அறிவுரை கூறிய எம்.பி செந்தில்குமார்.
அமைச்சருக்கு பாடம் நடத்திய திமுக எம்.பி! title=

தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் உள்ள கே.என். நேரு நான்கு முறை எம்.எல்.ஏ வாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  பொதுவாகவே திமுக சமத்துவம் மற்றும் சுயமரியாதையை பேசும் காட்சியாகவே தன்னை முன்னிலைபடுத்தி வருகிறது.  இன்று காலை முதலே அமைச்சர் கே.என். நேரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மாவை நேரில் சந்தித்த புகைப்படம் வெளியானது.  இதில் கவனிக்க வேண்டிய விஷயமாக நேரு, தன் அருகில் சோபா இருந்தும் சாமியாரின் முன் தரையில் அமர்ந்து இருந்தார்.

 

மேலும் படிக்க | முதல்வரின் பெருந்தன்மை; எத்தனை இரவுகளும் உறக்கம் தொலைக்கலாம்: வைரலாகும் எம்.பி. பதிவு

இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.  சில திமுக உடன் பிறப்புகளே இதற்கு முட்டுகுடுக்க முடியாமல் இருந்து வருகின்றனர்.  எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் "சுயமரியாதை எல்லாம் மாநாட்டில் மட்டும்தான்", "இது மக்களை அவமதிக்கும் செயல்", "சுயமரியாதை பேசும் கட்சி இப்படி செய்யலாமா" என்று இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  திமுகவின் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இந்த விசயத்திற்கு சூசகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில், "கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை. So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம்.  ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம், பெரியார்,அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே" என்று பதிவிட்டுள்ளார்.  இது தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் படிக்க | பதிவுத்துறை வரலாற்றிலேயே முதல் முறை; இந்த ஆண்டில் ரூ.12,700 கோடி வருவாய்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News