எம்.ஆர்.விஜயபாஸ்கர்- தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!!

தமிழகம் முழுவதும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மூலம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 5, 2018, 12:08 PM IST
எம்.ஆர்.விஜயபாஸ்கர்- தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!! title=

தமிழகத்தில் அரசு பேருந்து சேவை பாதிக்கப்படாமல் இருக்க, தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர். நேற்று மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மூலம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், தமிழகம் முழுவதும் தற்போது 80% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். வேலை நிறுத்தத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

Trending News