முக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு!!

திமுக தலைவர் முக ஸ்டாலினை தொழிலதிபர் முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து அவரது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார்.

Updated: Feb 12, 2019, 12:10 PM IST
முக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு!!

திமுக தலைவர் முக ஸ்டாலினை தொழிலதிபர் முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து அவரது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தா இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. 

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் முதல் திருமண அழைப்பிதழை வைத்த பின்னர், தற்போது முக்கிய தலைவர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் முகேஷ் அம்பானி-நீதா அம்பானி தம்பதி நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதி, சென்னை வந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து, பூங்கொத்து மற்றும் அழைப்பிதழ் கொடுத்து மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர்.