எழுத்தாளரான சர்வதேச வழக்கறிஞர்... My Little princes புத்தகம் உலகம் முழுவதும் வெளியீடு

சர்வதேச வழக்கறிஞர் ஹரிஹர அருண் சங்கர் எழுதிய My Little Princes புத்தகம் உலகம் முழுவதும் வெளியானது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 16, 2022, 01:27 PM IST
  • சர்வதேச வழக்கறிஞர் ஹரிஹர அருண்சங்கர் புத்தகம் எழுதியிருக்கிறார்
  • புத்தகமானது இத்தாலியில் வெளியிடப்பட்டது.
எழுத்தாளரான சர்வதேச வழக்கறிஞர்... My Little princes புத்தகம் உலகம் முழுவதும் வெளியீடு title=

சர்வதேச அளவில் வழக்கறிஞராக இருக்கும் ஹரிஹர அருண் சங்கர் மை லிட்டில் பிரின்சஸ் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகமானது,

தந்தை, மகளின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது. மேலும், இதில், காதல் ஒரு நொடியில் தொடங்கி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது விளக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Sri Lanka Crisis: கொழும்பு ஜோடியின் கிஸ் போட்டோ வைரல், ரணகளத்தில் ஒரு குதூகலமா?

MY LITTLE PRINCES புத்தகமானது காதல், துன்பம், நிதி நெருக்கடிகள் என எல்லாவற்றிலும்  நின்று போராடிய ராணா தனது தந்தையின் சபதத்தை நிறைவேற்றும்  கதை. 

My Little Princes

வழக்கறிஞர் தொழிலில் வேறு எவராலும் எட்ட முடியாத உயரத்தை எட்டுவேன் என்று தந்தையிடம் உறுதியளித்ததால்,  வெளிநாடு செல்ல  திட்டமிட்டு பல்வேறு சவால்களைச் சமாளித்து, லண்டனில் தனது வலுவான தளத்தை ராணா உருவாக்குகிறார். 

அவர் தனது லட்சியத்தை நிறைவேற்றத் தவறாமல் உழைத்தார்.ராணா மீது அவரது மகளான சாருவுக்கு இருக்கும் அக்கறையும், அனுதாபத்தையும் அவள்  ராணாவிடம் தெரிவிக்க விரும்பவில்லை. அவனது சாதனைகளைக்  கண்காணித்துக் கொண்டே இருந்தார்.

மேலும் படிக்க | பிரபஞ்சத்தின் புகைப்படமா, சமையலறை டைல்ஸா? - நாசாவைக் கிண்டல் செய்த எலான் மஸ்க்

மறுபுறம், லண்டனைச் சேர்ந்த ரேச்சல், எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல்  ராணாவிற்கு  பக்கபலமாக இருந்தார். தனது தந்தைக்கு அளித்த வாக்குறுதிகளைக் கடைப்பிடித்து, நன்கு அறியப்பட்ட வழக்கறிஞராக வேண்டும் என்ற தனது இலக்கை  அடைந்தாரா?  தடைகளைத் தாண்டி ராணா தன் வாழ்வின் காதலை  வென்றாரா? என்பதை மிகச்சிறந்த முறையில் இப்புத்தகத்தில் கூறியிருக்கிறார்கள்.

My Little Princes

இந்தப் புத்தகம்,  இத்தாலியின் ரோமில் உள்ள டெல்லா பென்டியென்சாவில்  இத்தாலியின் உச்ச நீதிமன்ற நீதிபதியான மரியா டேனிலா போர்செலினோ மற்றும் இத்தாலிய ஒலிம்பிக் ஆணையத்தின் உறுப்பினர் எலெனா பான்டலியோ ஆகியோரால்  ஆங்கில மொழியில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க | கட்டிப்படிக்க 7,100 ரூபாய் கட்டணம் - கட்டிப்பிடி வைத்தியத்தை தொழிலாக மாற்றிய இளைஞர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News