கல்லூரி மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மர்ம நபர்கள்

நேற்று இரவு மாணவி வித்யாலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 23, 2022, 11:45 AM IST
  • கல்லூரி மாணவி கொலை
  • மர்ம நபர்கள் செய்த கொடூர செயல்
  • 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை
கல்லூரி மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மர்ம நபர்கள் title=

திருச்சி மாவட்டம் பிஎச்எல் பகுதியை சோ்ந்தவர் வித்யா லட்சுமி. இவர் திருச்சி ஹோலிக்கிராஸ் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு இளங்கலை வணிகவியல் பயின்று வருகிறார். 

அதன்படி கடந்த 12ஆம் தேதி மாலை 6 மணியளவில் இவர் கல்லூரி முடிந்து வீடு திரும்பியவர் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து 3 மர்ம நபர்களில் வந்துள்ளானர். இதில் ஒருவர் வித்யா லட்சுமி அணிந்திருந்த துப்பட்டாவை இழுத்துள்ளார். மேலும் மற்றொரு வாலிபர் அவரது கையை பிடித்து இழுத்து பிடித்து கொண்டார். 

மேலும் படிக்க | வளசரவாக்கம் கொலை: சொத்துக்காக தந்தையை மகன் கொன்ற விவகாரத்தில் தடவியல் சோதனை

மேலும் 3 வது நபர் விஷம் கலந்த குளிா்பானத்தை அவருடைய வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். 

இந்த நிலையில் தற்போது சமபவம் குறித்து அவரது தாய் சாந்தி (45) கொடுத்த புகாரின் அடிப்படையில் பிஎச்எல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துனர். மேலும் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மாணவி வித்யாலட்சுமி கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  

இந்த நிலையில் நேற்று இரவு மாணவி வித்யாலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும் இவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி உடன்படாத நிலையில் தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் சுமார் 45 நிமிடங்கள் தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்ரபுத்திக்காரர்கள் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

மேலும் பேரறிவாளன் எதுவும் அறியாதவர் என்ற பேச்சு இருக்கிறதே என்ற கேள்விக்கு, ரோட்டில் செல்பவர்கள் யார் கேட்டாலும் பேட்டரி வாங்கிகொடுப்பாரா என கேள்வி எழுப்பினார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News