அதிமுக போஸ்டர்களை நள்ளிரவில் கிழிக்கும் மர்ம நபர்கள்!

கோவையில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களை நள்ளிரவில் கிழிக்கும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 23, 2022, 06:43 AM IST
  • அவினாசி சாலையில் போஸ்ட்டர்களை கிழிக்கும் மர்ம நபர்கள்.
  • அதிமுக போஸ்டர் மட்டும் கிழிக்கப்படுவதாக குற்றசாட்டு.
  • சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை.
அதிமுக போஸ்டர்களை நள்ளிரவில் கிழிக்கும் மர்ம நபர்கள்! title=

கோவை விளாங்குறிச்சி ரோடு 24 ஆவது வட்டக் கழகச் செயலாளர் லட்சுமணன் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் உட்பட அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை அச்சிட்டு ஒட்டியிருந்தார். கோவை அவினாசி சாலையில் மேம்பலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்ட்டர்களை மர்ம நபர் ஒருவர் போஸ்டர்களை கிழிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்! பால் ஊற்றினதும் எழுந்து வந்த மூதட்டி!

adm

தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் அதே இடத்தில் மீண்டும் அப்பொழுது அதிமுக அரசின் திட்டங்களை விளக்கும் போஸ்ட்டர்களை ஒட்டியுள்ளனர். கோவை அவினாசி சாலையில் 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள திமுகவின் போஸ்டர்களை கிழிக்காமல் அதிமுக போஸ்டரை மட்டும் கிளித்துள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

adm

மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என மாநகராட்சி ஆணையரின் உத்தரவுகளை மீறி திமுக, அதிமுக, பாஜகவினர் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வருவதால் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியையும், முக சுளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.  சமீபத்தில் மீண்டும் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடைபெற்ற நிலையில் தற்போது இந்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

மேலும் படிக்க: RSS-ன் இந்து மதத்தை நம்ப மாட்டோம் BJP-க்கு எதிராக யுத்தம் செய்வோம்: மம்தா பானர்ஜி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News