திமுக கவுன்சிலர் வீட்டில் கொள்ளை; மிளகாய்பொடி தூவி செயினை பறித்துச் சென்ற மர்ம பெண்

திமுக மாவட்ட கவுன்சிலர் வீட்டில் புகுந்த மர்ம பெண், மிளகாய் பொடி தூவி நூதன முறையில்  செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 8, 2022, 08:43 PM IST
  • திமுக கவுன்சிலர் வீட்டில் கொள்ளை
  • மிளகாய் பொடி தூவி செயின் பறிப்பு
  • விசாரணையில் இறங்கிய காவல்துறை
திமுக கவுன்சிலர் வீட்டில் கொள்ளை; மிளகாய்பொடி தூவி செயினை பறித்துச் சென்ற மர்ம பெண்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். திமுக மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இவருக்கு சொந்தமாக திருப்போரூர்  கந்தசுவாமி கோவில் சரவண பொய்கை குளம் அருகே இரண்டு தளத்துடன் வீடு மற்றும் வணிக வளாகம் உள்ளது. மனைவி மேகலா உடல் நிலை சரியில்லாத காரணத்தால், திருப்போரூர் வீட்டில் இரண்டாவது தளத்தில் ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், இன்று காலை, மேகலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். 

மேலும் படிக்க | சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மேகலாவிடம்  குடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் அமர்ந்துள்ளார். மேகலா தண்ணீர் கொடுத்த பின், உடனே மிளகாய் பொடியை மேகலா கண்களில் தூவியுள்ளார். மேகலா தன் கண்களை துடைக்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரம் தாளி சரடு செயினை பறித்து தப்பியுள்ளார். இதுகுறித்து மேகலா கணவர் ஜெயச்சந்திரன் திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார். செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,சுகுணா சிங்  நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்தார். 

தொடர்ந்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லில்லி, எஸ்.ஐ ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் வணிக வளாகம் மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். திமுக கவுன்சிலர் வீட்டில் புகுந்து மர்ம பெண் ஒருவர் மிளகாயப் பொடி தூவி, செயினை பறித்துச் சென்ற சம்பவம் திருப்போரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | NEET UG 2022 Result: தமிழக அளவில் முதலிடம் பிடித்து மதுரை மாணவன் சாதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News