"திராவிட மாடல் ஆட்சி எஜமானிஸ்வாஹா" உதயநிதிக்காக வித்தியாசமாக ஓதிய புரோகிதர்

நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பூமி பூஜையில் புரோகிதர் வித்தியாசமான மந்திரம் ஓதியது கவனம் பெற்றுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 20, 2023, 08:46 PM IST
"திராவிட மாடல் ஆட்சி எஜமானிஸ்வாஹா" உதயநிதிக்காக வித்தியாசமாக ஓதிய புரோகிதர் title=

நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் 28-ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்ல உள்ளார். அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக நாமக்கல் அடுத்த பொம்மைக்குட்டை மேட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு விழா பந்தல் அமைப்பதற்கான‌ பூமி பூஜை இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க | களம் தயார்! ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு வாய்ப்பு

இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம் மற்றும் பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பந்தல் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தனர். அப்போது பூமி பூஜை செய்து வைத்த புரோகிதர், மு.க.ஸ்டாலின் ’நாமா எஜமானிஸ்வாஹா, உதயநிதி ஸ்டாலின் எஜமானிஸ்வாஹா, திராவிட மாடல் ஆட்சி எஜமானிஸ்வாஹா’ என மந்திரம் ஓதினார். இது அங்கிருந்தவர்களை சிரிப்பை ஏற்படுத்தியது. 

நாமக்கல் வருகை தரும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு மற்றும் திமுக சார்பில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர். விழாவை ஒருங்கிணைப்பு பணியில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னின்று கவனித்து வருகிறார். மேலும், மாவட்ட செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் விழா ஏற்பாட்டை கவனித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | By Elections: ஈரோடு இடைத்தேர்தலில் யார் வேட்பாளர்? விளக்கம் அளிக்கும் ஜி.கே.வாசன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News