திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் தென் சென்னை பாஜக வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கோவிலுக்கு நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து தான் இருக்கின்றது எனவும் திமுக மாணவர் அணியினர் நீட்டை எதிர்த்து போராடி வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட்டை எதிர்த்து தான் என்று கூறிய நிலையில் மக்களை ஏமாற்றும் செயல் என்றும் நீட்டைப் பற்றி தவறான கருத்து பரவ விடப்பட்டுள்ளது என்றும் நீட் தேர்வில் முன்னால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது செல்வந்தர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளி மாணவர்கள்தான் அதிக மருத்துவம் படித்தனர்.
மேலும் படிக்க | கோயம்புத்தூர் மக்களே கொண்டாட்டத்திற்கு தயராகுங்கள்.. இதோ கோவை விழா 2024
குறிப்பாக நாமக்கல் போன்ற மாவட்ட மாணவர்கள் மருத்துவத்துறையில் அதிகம் சேர்ந்தனர் தற்போது நீட்டிற்கு பின்பு அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட மருத்துவத்தில் தேர்வாகின்றனர். நீட் பற்றி அரசியல்வாதிகள் தான் தவறான கண்ணோட்டத்தை பரவ விடுகின்றனர். தற்போது இரண்டு லட்சம் மாணவர்கள் நீட் எழுத உள்ளனர். நீட்டை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் தற்போது நடைமுறையில் உள்ளது, எனவே மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பயிற்சி கொடுக்க வேண்டும், பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும். சாதாரண மாணவர்களுக்கு நீட் உதவி செய்கிறது. மருத்துவக் கல்லூரி முதலாளிகள் கூட நீட் இல்லாமல் தங்கள் பிள்ளைகளை மருத்துவம் சேர்க்க முடியாது.
இது ஒரு புரட்சி மாணவர்கள் நீட்டை ஏற்றுக் கொள்கின்றனர். அதை அரசியல்வாதிகள் தான் ஏற்றுக் கொள்வதில்லை. திமுகவின் ஆர் எஸ் பாரதி பேசினால் அதை சர்வ சாதாரணமாக விட்டு விடுவார்கள். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை விமர்சித்து மோசமான விமர்சனம் செய்வது திமுகவினரால் மட்டுமே முடியும். அனைத்து படிப்புகளுக்கும் மதிப்பு உண்டு நான் படித்ததை அவர்கள் செய்த உதவி என்கின்றனர். அனைவருக்கும் திறமையுண்டு அனைத்திற்கும் உரிமை கொண்டாடக்கூடாது என தெரிவித்தார்.
விஜய்க்கு பாஜக எதிர்ப்பு
நேற்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற கல்வி விருது விழாவில் விஜய் நீட் தேர்வை எதிர்த்து பேசி இருந்தார். இதனால் பாஜகவை சேர்த்த பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இது குறித்து பேசிய பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம், நீட் தேர்வு பற்றி கருத்து சொல்லும் விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும். எதற்காக நீட் வேண்டாம் என்று பத்திரிகையாளர்கள் விஜயிடம் கேட்க வேண்டும். குறிப்பாக நீட் வேண்டாம் என்பதற்கு விஜய் 3 காரணங்களை கூற வேண்டும். நடிகர்களை திரையில் பார்த்து ரசிக்கத் தயாராக இருக்கும் மக்கள், ஏமாந்து அவர்கள் பின்னால் செல்ல தயாராக இல்லை. தமிழகத்திற்கு தேவையான நல்ல தலைவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள். அவர்கள் தலைமையில் 2026ல் தமிழகத்தில் நல்லாட்சி அமையப்போகிறது. எனவே விஜய் அவருக்கு முன்னால் அரசியலுக்கு வந்த நடிகர் உதயநிதி போல பேசாமல், ஆராய்ந்து உண்மைத் தன்மையை புரிந்துகொண்டு பண்போடு பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ